இயக்குனர் ஜனநாதன் உடல் நாளை நல்லடக்கம்

இயக்குனர் ஜனநாதனின் உடல் மைலாப்பூர், கச்சேரி சாலையில் தேவடி தெருவில் உள்ள அவரது சகோதரி வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகினர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குனர் அமீர், இயக்குனர் சேரன், இயக்குனர் கரு.பழனியப்பன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, நடிகர் பொன் வண்ணன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் அங்கேயே இருந்தனர். இயக்குனர் ரஞ்சித், இயக்குனர் அதியன் ஆதிரை, நடிகர் கலையரசன், நடிகர் அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். 

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஜி. ராமகிருஷ்ணன், ஆர்.பாலகிருஷ்ணன், டாக்டர். தொல்.திருமாவளவன் எம்.பி, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

இயக்குனர் ஜனநாதனின் உடல் நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்