இயக்குனர் ஜனநாதன் காலமானார்

இயக்குனர் ஜனநாதன் இன்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். வாந்தி மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருந்தது என தீவிர சிகிச்சையில் இருந்தவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 61

இயற்கை,  ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை ஆகிய திரைப்படங்களை இயக்கியவர். லாபம் படம் வெளிவர இருக்கிறது.  இயற்கை படத்திற்கு தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறையில் பொதுவுடமைச் சிந்தனைகளை வலியப் புகுத்தாமல் அப்படியான திரைக்கதைகளையே தேர்ந்தெடுத்தவர் என்பது முக்கியமானது. 

இயக்குனர் ஜனநாதனின் இறுதிச் சடங்கு சென்னை மைலாப்பூரில், கச்சேரி ரோட்டில் இருக்கும் தேவரடி தெருவில் அவரது சகோதரி வீட்டில் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்