எழுத்தாளர் இமையத்துக்கு சாகித்ய அகாதமி விருது

எழுத்தாளர் இமையம் எழுதிய செல்லாத பணம் 2020 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. 

இமையத்தின் இயற்பெயர் அண்ணாமலை. கோவேறு கழுதைகள் எனும் நாவலின் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானவர். ஆறுமுகம், செடல், எங் கதெ, செல்லாத பணம் ஆகிய நாவல்களும், மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச்சேவல், சாவு சோறு, பெத்தவன், நறுமணம், நன்மாறன் கோட்டைக் கதை, இமையம் சிறுகதைகள் ஆகிய சிறுகதை நூல்களும் வெளியாகியிருக்கின்றன. கருத்துரையிடுக

0 கருத்துகள்