இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனுக்கு தீவிர சிகிச்சை

இயற்கை, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடமை உள்ளிட்ட படங்களின் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார். 

நேற்று விஜய் சேதுபதி நடித்துவரும் இலாபம் படத்தின் டப்பிங் வேலைகளில் இருந்திருக்கிறார். பின்னர் இரவு சாப்பிட்டதும் வாந்தியும், தொடர்ந்து மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் மைலாப்பூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கிருந்து அப்போலோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.

மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதால் சுயநினைவை இழந்துவிட்டதாகவும், வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசம் நடைபெறுவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

விரைவில் மீண்டு வர வேண்டுமென்று தமிழக ரசிகர்களும், திரைத்துறையினரும் சமூக வலைத்தளங்களில் தனது பதிவிட்டு வருகின்றனர். 

ஆனால் சில முன்னணி ஊடகங்கள் எப்போதும்போல் அவர் இறந்துவிட்டதாக தகவல்களைப் பரப்பி வருகிறது. இயக்குனர் அமீர், ‘ஊடகத்தினரைத் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டுள்ளார். கருத்துரையிடுக

0 கருத்துகள்