கலை இலக்கியா கவிதைகள் நூல் வெளியீட்டு விழா

தமுஎகச மற்றும் அறம் கிளை இணைந்து நடத்திய கலை இலக்கியா கவிதைகள் நூல் வெளியீட்டுவிழா 44 வது சென்னை புத்தகக்காட்சியின் அரங்கில் நடைபெற்றது. 

தன் வார்த்தைகளால் ஒரு ஆறுதல் தேடும் மனதுக்கு ஒத்தடம் கொடுக்கவும், அதே வார்த்தைகளால் சுளுக்கெடுக்கவும் கூடிய கவித்திறன் பெற்றவர் கவிஞர் கலை இலக்கியா. 

அவர் இறந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இதுவரை வெளிவராத அவரது கவிதைகளின் தொகுப்பு நம் பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது

கலை இலக்கியா கவிதைகள் நூலை பத்திரிகையாளர் அ.குமரேசன் வெளியிட கவிஞர் மு.முருகேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார். நிகழ்வை எழுத்தாளர் அ.உமர் பாரூக் ஒருங்கிணைத்தார். 

பத்திரிகையாளர் அ.குமரேசன் பேசிய காணொளியைக் காணலாம்


நிகழ்வில் கலை இலக்கியாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். 

புகைப்படத்தில் இடமிருந்து வலமாக, 
ஊடகவியலாளர் இவள் பாரதி, பத்திரிகையாளர் அ.குமரேசன், கவிஞர் மு.முருகேஷ், எழுத்தாளர் அ.உமர் பாரூக், கலை இலக்கியாவின் கணவர் காமுத்துரை மற்றும் கலை இலக்கியாவின் புதல்வர்கள் பாரதி, கபிலன்

கவிஞர் மு.முருகேஷ் பேசிய காணொளியைக் காணலாம். கருத்துரையிடுக

0 கருத்துகள்