கோவிட் தடுப்பூசி போடுவதில் மத்திய அரசின் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தக் கோரிக்கை

கோவிட் தடுப்பூசி போடுவதில் மத்திய அரசின் வழிகாட்டுதலை நடைமுறைப்படுத்தக் கோரி அக்குஹீலர் அ.உமர்பாரூக் முக்கிய கருத்துக்களை முன்வைக்கிறார். 

 ‘அரசு புள்ளி விவரங்களின் படி தமிழ்நாடு முழுவதும் கொரொனா நோயாளிகள் அதிகமாகி வருகிறார்கள். நோய்ப்பரவலைத் தடுக்க சமூக விலகல், முகமூடி அணிதல் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அமுல்படுத்தி வருகிறது. இரவு நேரக் கட்டுப்பாடு, ஞாயிறு ஊரடங்கு, வகுப்புகள் ரத்து போன்ற கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. பொருளாதார அடிப்படையில் கடுமையான பாதிப்பினைச் சந்தித்திருக்கும் நாங்கள் தமிழ்நாடு அரசின் மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். கொரொனா நோய்த்தொற்றுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதவரவளிக்கிறோம்.


கோவிட் தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றை மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாடு அரசு இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது. தனியார் மருத்துவமனைகளிலும் கட்டணத்தோடு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு இந்தியரும் தன் விருப்பத்தில் அடிப்படையில் கோவிட் தடுப்பூசிகளை தானே முன்வந்து செலுத்திக் கொள்ளும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது. எல்லா மக்களுக்கும் கட்டாயம் என்று எந்த அறிவிப்புலும் குறிப்பிடவில்லை. ஆனால், பல தனியார் நிறுவனங்களும், அரசுத் துறைகளும் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கட்டாயப்படுத்துகின்றன.

# இணை நோய் உள்ளவர்கள் தகுந்த மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும், மருந்து ஒவ்வாமை உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதில்லை என்றும் நுண்ணுயிர் நோய் சிறப்பு மருத்துவர்களும், மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் தெரிவித்துள்ளனர். 

# கோவிட் தடுப்பூசியினால் ஏற்படும் மரணம் உள்ளிட்ட எந்தவித பக்க விளைவுகளுக்கும் மாநில, மத்திய அரசுகளோ, தடுப்பூசி நிறுவனமோ, காப்பீட்டு நிறுவனங்களோ பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

#    இந்தியாவில் இதுவரை கோவிட் தடுப்பூசிகள் போட்டதற்கு பின்னால் ஏற்பட்ட மரணங்கள் – 180. தீவிரமான உடல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிரத்திற்கும் மேல். எனவே, தடுப்பூசி குறித்த அச்சம் மக்களிடம் ஏற்படுவது இயல்பானதுதான்.

# கோவிஷீல்டைக் கண்டுபிடித்த அஸ்ட்ரா ஜெனிகாவின் கோவிட் தடுப்பூசியை டென்மார்க், அயர்லாந்து, ஐஸ்லாந்து உள்ளிட்ட பல நாடுகள் நிறுத்திவைத்துள்ளன. இரத்தம் உறைதல், மூளை பாதிப்பு உள்ளிட்ட தீவிர உடல் பாதிப்புகளும், இறப்புகளும் ஏற்படுவதாக ஜெர்மனி, நார்வே போன்ற நாடுகளில் புகார் எழுந்துள்ளது. அஸ்ட்ரா ஜெனிகாவின் கோவிஷீல்டையும், அதே வகைத் தடுப்பூசியான கோவேக்சினையும் பாதுகாப்பானது என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருவது மட்டும் நம்பத்தகுந்தது அல்ல.

# அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் கடந்த காலங்களில் தவறான தரவுகளைத் தந்ததற்காக குறைந்தது 12 முறை குற்றம் நிரூபிக்கப்பட்டு 61,72,41,159/- டாலர்கள் இந்திய மதிப்பில் ரூபாய் 45,05,86,04,607/- (ரூபாய் நான்காயிரத்து ஐநூற்று ஐந்து கோடியே என்பத்து ஆறு லட்சத்து நான்காயிரத்து அறுநூற்று ஏழு) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தரவுகளின்படி பார்த்தால் அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் சொல்வதை மட்டும் நம்பி தடுப்பூசிகளின் செயல்திறனையும், பாதுகாப்பையும் நம்ப முடியுமா?

# வழக்கமாக ஒவ்வொரு தடுப்பூசியும் நீண்ட கால ஆய்வுகளுக்குப் பிறகே மக்கள் பயன்பாட்டுக்கு வரும். கோவிட் தடுப்பூசிகளைப் பொறுத்தவரை உலக பேரிடர் சூழலைக் கருத்தில் கொண்டு முறையான காலத்திற்கு முன்பே பயன்பாட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், RDBPC போன்ற பயன்பாட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமல் தடுப்பூசிகளை மக்களுக்குப் பரிந்துரைப்பது சரியா?

# தடுப்பூசிகளுக்குப் பின்பு ஏற்படும் பக்க விளைவுகளை எவ்வாறு ஆய்வு செய்ய வேண்டும் ? என்பதை உலக சுகாதார நிறுவனம் பிரைட்டன் அளவுகோல்களை வெளியிட்டுள்ளது. தடுப்பூசிக்குப் பிறகான பாதிப்புகளைக் கண்டறியும் (AEFI) அமைப்பின் வழிகாட்டுதல்களையும், உலக சுகாதார நிறுவனத்தின் அளவுகோல்களையும் மத்திய, மாநில அரசுகள் பின்பற்றவில்லை.

# தடுப்பூசிகளுக்குப் பிறகு ஏற்படும் மரணம் உள்ளிட்ட எந்த பாதிப்பையும் உடனடியாக அரசு நிர்வாகம் மறுத்து விடுகிறதே தவிர, அவற்றை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்வதில்லை.

# தமிழக அரசு அதிகாரிகள் முதலில் தடுப்பூசி போட்ட பிறகு கொரொனா வராது என்றார்கள். அப்புறம், முதல் டோசிற்குப் பிறகு வந்தாலும் இரண்டாவது டோசில் சரியாகி விடும் என்றார்கள். மூத்த அரசியல்வாதிகளான துரை முருகன் போன்றோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகு கொரொனா பாசிடிவ் வந்தபிறகு, தடுப்பூசிக்குப் பிறகு கொரோனா வந்தாலும் பயப்படவேண்டியதில்லை, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்கள். ஆவடியைச் சேர்ந்த மயக்கவியல் நிபுணர் டாக்டர் பாஷா, பெரம்பலூரில் அரசு மருத்துவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் கொரொனா தடுப்பூசிகளுக்குப் பிறகு மரணம் அடைந்துள்ளனர். நடிகர் விவேக்கின் இறப்பும் அவ்வாறுதான். ஆனால், முறையான ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமல் அரசு ‘மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை’ என மறுத்து வருகிறது.

# அஸ்ட்ரா ஜெகாவின் தடுப்பூசியை 15 ற்கும் மேற்பட்ட நாடுகள் தடை செய்துள்ளன. அவசரமாக தடுப்பூசிக்கு அனுமதியளித்த ஐரோப்பிய மருத்துவ முகமை (இ.எம்.ஏ) யின் செயல் இயக்குநர் எமர் குக்கிற்கு உலகம் முழுவதும் இருந்து மிக முக்கிய மருத்துவர்கள் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்.

# இந்தியா முழுவதும் 111 மருத்துவர்கள் இணைந்து தடுப்பூசிக்கு எதிராக கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

            இந்த சூழலில்தான் மத்திய அரசு பொதுமக்களுக்கான தடுப்பூசி வழிகாட்டுதல்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதை கட்டாயமாக்கவில்லை. தன் விருப்பத்தின் அடிப்படையில் போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. கட்டாயத் தடுப்பூசிச் சட்டம் அமலிலுள்ள அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே தடுப்பூசியை விரும்பாத குடிமக்களுக்கு விலக்கு அளிக்கும் முறை நடைமுறையில் உள்ளது. எனவே,மத்திய அரசின் வழிகாட்டுதலின் படியும், உலக நாடுகளின் நடைமுறைகளின் படியும் கோவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள முன்வராத குடிமக்களை கட்டாயப் படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கையெழுத்துப் போட விரும்புவோர் கீழ்க்கண்ட லிங்கைக் கிளிக்கவும்

http://chng.it/GGqw7vQD7r


கருத்துரையிடுக

0 கருத்துகள்