ஏப்ரல் 20 முதல் முழு ஊரடங்கு

கொரோனா தொற்றுப் பரவல் அதிகமானதை அடுத்து தளர்வுகளுடன் இருந்த ஊரடங்கை கட்டுப்பாடுகளுடன் கடைபிடிக்க அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. 

இதன்படி பூங்காங்கள், அருங்காட்சியகங்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களுக்கு எந்த நாட்களிலும் அனுமதி இல்லை. 

ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் கடை, கறிக்கடை உள்ளிட்ட கடைகளுக்கும், திரையரங்கத்திற்கும் அனுமதி இல்லை. 

இரவு 10 மணி முதல் 4 மணி வரை முழு ஊரடங்கு என்பதால் வாகனங்கள் இயங்காது. அதே சமயத்தில் தொழிற்சாலைகள் முறையான விதிகளைப் பின்பற்றி இரவு நேரப் பணிகளில் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்படுகின்றனர். 

இரவு நேர ஊரடங்கின்போது தனியார் வாடகை ஆட்டோ டாக்ஸி ஆகியவையும் இயக்கப்படாது. வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு இரவு நேரத்தில் அனுமதி கிடையாது.

முன்னர் திட்டமிட்ட மத நிகழ்ச்சிகள் தவிர்த்து வேறு புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 

ஊடகத்துறையினர், பால், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் இருப்போர்,  மருத்துவமனை ஊழியர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே வர அனுமதி இல்லை. 

ப்ளஸ் டூ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. அதே நேரத்தில் செய்முறைத் தேர்வு திட்டமிட்டப்படி நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  ஏப்ரல் 20 முதல் அமலுக்கு வரும் இந்த முழு ஊரடங்கு ஏப்ரல் 30 வரைக்கும் நீட்டிக்கப்படுகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்