தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்

கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் மீண்டும் தமிழகத்தில் மீண்டும் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலுக்கு வருகிறது. தேர்தலை முன்னிட்டு பொதுமுடக்கத்தைத் தள்ளிப் போட்டிருந்த அரசு தேர்தல் முடிந்ததும் பொது முடக்கத்தை அறிவித்திருக்கிறது.

இதன்படி, கோயம்பேடு வணிக வளாகம் இயங்காது. டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இல்லை. 

தொழிற்சாலைகள் உரிய நெறிமுறைகளின்படி இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

திரையரங்கம், மால், கேளிக்கை விடுதிகள், பூங்காங்கள் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் 50 சதவீத ஆட்களுக்கு மட்டுமே அனுமதி. 

கடைகள், உணவகங்களிலும் 50 சதவீத ஆட்களுக்கு மட்டுமே அனுமதி.

திருமண விழாக்களில் 100 பேரும், இறுதி ஊர்வலத்தில் 50 பேரும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

திரைப்பட வேலைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழும், தடுப்பூசிப் போட்டுக்கொண்ட சான்றிதழும் அவட்சியம்.

இவையெல்லாம் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கருத்துரையிடுக

0 கருத்துகள்