தோழர் மைதிலி சிவராமனுக்கு அஞ்சலி

மைதிலி சிவராமன் 1966-68 காலகட்டத்தில் ஐநா சபைக்கான இந்திய நிரந்தர தூதுக்குழுவில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றினார். மூன்றாம் உலக நாடுகளில் தன்னாட்சி அதிகாரம் இல்லாத பகுதிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் காலனிமயமழிதல் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். ஐநா சபைப் பணிக்காலம் முடிந்த பின் இந்தியா திரும்பி இடதுசாரி இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டார். தொழிற்சங்கவாதியாகவும் பெண் உரிமைச் செய்ல்பாட்டாளராகவும், அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்பில் பணியாற்றி நன்கறியப்பட்டார்.

கீழ்வெண்மணிப் படுகொலைகளை உலகின் கவனத்துக்கு கொண்டு வந்ததில் மைதிலியின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு குறித்து அவர் எழுதிய பத்திகளும் கட்டுரைகளும் “ஹாண்டட் பை ஃபையர்” (Haunted by Fire) என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளன.வாச்சாத்தி வன்முறை நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்களை நேர்கண்டு அதனைப் பற்றிய உண்மைகளை ஆவணப்படுத்தியுள்ளார். நிகழ்வு குறித்து இந்திய பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தோன்றி வாதிட்டவர்.

தோழர். மைதிலி சிவராமன் பணிகள் என்றென்றும் போற்றப்படும். மறைவிற்கு செவ்வஞ்சலியை உரித்தாக்குகிறோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்