மே 10 முதல் இருவாரங்களுக்கு முழு ஊரடங்கு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மே 10 முதல் 23 வரை முழு ஊரடங்கு செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 

இந்த ஊரடங்கின்போது டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதியில்லை.

மளிகைக்கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் மதியம் 12 மணி வரை இயங்கும்.

மாநில அரசின் முக்கியமான துறைகளாக மாவட்ட தொழில் மையம், மகளிர் நலன் சார்ந்த அலுவலகங்கள் தவிர மற்ற அனைத்து அலுவலகங்களும் இயங்காது.ஊடகத்துறையினருக்கு முழு அனுமதி

மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்து கிடையாது.

இவை தவிர ஏற்கனவே அமலில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்.

இந்த ஊரடங்கிற்கு மக்கள் தயாராவதற்காக இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கருத்துரையிடுக

0 கருத்துகள்