மே 7 ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் திமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மை பெற்று வெற்றியடைந்துள்ளது. பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைக்கிறது. அதே சமயத்தில் முதன்முறையாக ஆட்சியமைக்கவிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்ற அதிமுக வேட்பாளர்களைவிட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதிமுக எதிர்கட்சியாக தனது செயல்பாடுகளைத் தொடரும். 
தமிழகத்தின் மிகப் பெரும் அரசியல் ஆளுமைகளான கலைஞர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழகம் எதிர்கொண்டிருக்கும் முதல் தேர்தல். இதில் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. 

திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்களைக் கருத்தில்கொண்டே மக்கள் வாக்களித்திருக்கின்றனர். அதனால் புதிய அரசுக்கு முன்னிருக்கும் சவால்களாக அவர்கள் அறிக்கையில் கூறிய விஷயங்களை அடுத்தடுத்து நிறைவேற்றுவதே மக்களின் நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தும் எனலாம். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்