கிருமிகள் உலகில் மனிதர்கள்

 இன்றைய சூழலில் நாம் அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய, தெளிவுப் பெற வேண்டிய புத்தகம். கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்கள் குறித்த சில அடிப்படையான தகவல்கள் புத்தகத்தில் இருந்து:

நூலின் பெயர்: கிருமிகள் உலகில் மனிதர்கள்
ஆசிரியர்: அக்கு ஹீலர் அ. உமர் பாரூக்
வெளியீடு:  புத்துயிர் பதிப்பகம்
கிருமிகள் ஓர் அறிமுகம்:

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றியவை கிருமிகள்.”
இயற்கையின் படைப்பில் கிருமிகள் தான் ஆதி உயிரினம். இயற்கை மாற்றங்களுக்கு அடிப்படை காரணமான வேதியியல், உயிரியல் சூழற்சிகளை கிருமிகள் செய்கின்றன. உலகில் இயற்கையாக உருவாகும் கழிவுப் பொருட்களை மறுசூழற்சி செய்து நச்சுக்களை அகற்றுகின்றன. இந்த உலகே கிருமிகளால் உருவானது. கிருமிகளால் இயங்குவது. உலகம் உருவாக காரணமாக இருக்கும் கிருமிகளே உடல் உருவாகவும் காரணம்.

அறிவியல் ஆய்வாளர்கள்,  கிருமிகளை நன்மை செய்யும் கிருமிகள் , தீமை செய்யும் கிருமிகள் என்று இருவகைகளாக பிரிக்கின்றனர். பூமியில் 85 லட்சம் வகையான கிருமிகள் உள்ளதாகவும் அவற்றில் தீமை செய்யும் கிருமிகள் ஐந்து சதவிகிதம் மட்டுமே என ஆய்வுகள் கூறுகின்றன.. மனித உடலில் சராசரியாக 90 டிரில்லியன் கிருமிகள் வாழ்வதாக மருத்துவ வினஞானிகள் கூறுகின்றனர். 

உண்மையில் தீமை செய்யும் கிருமிகள் என்று ஒன்று இல்லை.

சாதாரண துணிகளினால் செய்யப்படும் முகமூடிகளின் நூல் இடைவெளி கிருமிகளின், நுண்ணுயிர்களின் அளவைவிட அதிகம். கிருமிகளை சாதாரண கண்களால் பார்க்க முடியும். நுண்ணுயிர்களை எலெக்ட்ரானிக் மைக்ராஸ்கோப் மூலமாக கூட பார்க்க முடியாது.

கிருமிகள் செய்யும் நன்மையும் தீமையும் (?):
தாவரங்களின் வேர்களில் குடியேறி நைட்ரஜனை உரமாக மாற்றி மண் வளத்தை பெருக்குகின்றன. ஆக்ஸிஜன் இல்லாமல் உயிர்வாழும் கிருமிகளை கொண்டு நீர்நிலைகளில் ஏற்படும் நீரக்கசிவை தடுக்க பயன்படுகின்றன. மின் ஆற்றல் உற்பத்தி செய்து அதில் சேமிக்கும் “உயிரி மின்கலம்” என்னும் பயோ பேட்டரி தயாரிக்க பயன்படுகின்றன. பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் கிருமிகள் கொண்டு கழிவுகளை உருமாற்றும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. கழிவுகளை உண்டு உலகை சுத்தம் செய்யும் பணியை கிருமிகள் செய்கின்றன.நாம் உண்ணும் உணவை செரித்து ஊட்டச்சத்துகளாக மாற்றுகின்றன. 

கிருமிகள் செய்யும் முக்கிய தீமையாக சொல்லப்படுவது – உடலின் எதிர்ப்பு சக்தியை சீர்குலைக்கிறது என்பது.. பாக்டீரியாக்கள், வைரஸ்கள் என்று ஒவ்வொரு நோய்க்கும் ஒரு கிருமி காரணம் என்று மருத்துவர்கள் பட்டியல் இடுகின்றனர். ஆனால் இந்த கிருமிகள் அனைவரையும் பாதிப்பதில்லை. இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி. எதிர்ப்பு சக்தி பலவீனமாக உள்ளவர்களை மட்டுமே இந்த கிருமிகள் பாதிக்கின்றன.  

கிருமிகளிடம் இருந்து தப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன.  ஒன்று – கிருமிகளைப் பற்றி அறிந்திருப்பது மற்றொன்று நம் உடலைப் பற்றி அறிந்திருப்பது. இவை இரண்டில் நம் உடலைப் பற்றி அறிந்திருப்பது சிறந்த வழி.   
கிருமிகளால் அனைவருக்கும் நோய் பரவும் என்றால் காற்றில் பரவும் அல்லது நீரில் பரவும் ஒரு கிருமியை உற்பத்தி செய்து எதிரி நாட்டில் விட்டு அனைவருக்கும் நோய் வரவழைத்துவிடலாம். ஆனால் அது சாத்தியம்இல்லை. உனமையில கிருமிகள் தாக்குதலுக்கு பயன்படாது. இதுவரை கிருமிகளைக் கொண்டு எந்த போரும் நிகழ்த்தப் படவில்லை. 

தீமை செய்யும் கிருமி மற்றும் வைரஸ்களை அழிக்க நாம் நுண்ணுயிர் கொள்ளிகள் என்றழைக்கப்படும் anti-biotic மருந்துகளை உண்கிறோம். அவை உடலில் சென்று எல்லா கிருமிகளையும் அழித்துக் விடுகின்றன. நன்மை செய்யும் கிருமிகளையும் சேர்த்து. அதனால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. 

கிருமிகள் குறித்த இன்றைய புரிதல்:
“உலகில் உள்ள எல்லா நோய்களுக்கும் காரணம் கிருமிகள். அவை ஒன்று இருந்தால் பல மடங்காக பெருகி நோய்களை உருவாக்கும்”. 
மக்களின் பயத்துக்கு நம்பிக்கையையும் நம்பிக்கைக்கு பயத்தையும் மூல தானமாக கொண்டு வியாபாரம் செய்வது பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் உத்தி.

கிருமிகள் – உணவின்றி வாழ்வதில்லை: 
வைரஸ் – வாழும் இடத்திற்கு ஏற்றாற்போல்  உருமாற்றம் அடைபவை. அதனை அறிகுறிகள் மற்றும் அனுமானம் மூலமே கண்டறிய முடியும். மைக்ரோஸ்கோப் மூலம் காண முடியாது. 
நம் உடலில் காய்ச்சலொ சளியோ கட்டியோ உருவாகும் போது பரிசோதனை செய்தால் கிருமிகள் இருப்பதில்லை. இந்த தொந்தரவுகள் டைஃபாய்ட் ஆகவோ, காச நோயாகவோ, புற்று நோயாகவோ இருந்தால் பல நாட்களுக்கு பின்னரே தெரிய வருகிறது. முதலில் நோய்கள் உருவாகின்றன. தொந்தரவுகள் நீடிக்கும் போது கிருமிகள் வெளிப்படுகின்றன. 

கழிவுகளின் உருவாக்கம்:
பசி, தாகம், தூக்கம், ஓய்வு போன்ற இயற்கை விதிகளை உடல் தேவைகளை புரிந்துக் கொள்ளாமல் நாம் வாழ்வியல் முறையை மாற்றும் போது உடலில் கழிவுகள் தோன்றுகின்றன. ரசாயன உணவுகளை உட்கொள்வது, மது, புகை போன்ற பழக்கத்தாலும் கழிவுகள் உருவாகின்றன. அவற்றை வெளியேற அனுமதிக்காமல் ரசாயன மருந்துகளை உண்ணும் போது அங்கு கிருமிகள் உருவாகின்றன. அவை ரசாயன கழிவுகளாக மாறி தீவிர நோய்களாக (Acute Diseases) உருவெடுக்கின்றன. நம் உடலில் லைசோசோம்  உருவாகி மூன்றாம் கட்ட கழிவுகளை அழிக்கின்றன. அதிலும் அழிக்கப்படாத கழிவுகளை அழிப்பதற்காக நம் உடலின் எதிர்ப்பு சக்தி கிருமிகளை உருவாக்கி அழிக்கின்றன. கிருமிகள் நோயின் இரண்டாம் மூன்றாம் நிலைகளில் தோன்றுகின்றன. 

இதே போல் புற சூழலில் இருந்தும் கிருமிகள் உருவாகின்றன. இவற்றையும் லைசோசோம்கள் அழிக்கின்றன. உடல் கழிவுகளின்றி இயல்பில் இருக்கும் போது வெளியில் இருந்து கிருமிகள் நம் உடலுக்குள் நுழைவதில்லை. ஒரு உடலில் தோன்றிய கிருமிகள் மற்றொரு உடலில் தன்மை மாறுபாட்டால் வாழாது. 

பிஸியோமார்பிசம் என்ற “ஆண்டனி பீசாம்பின்” கோட்பாடு: 
“எல்லா கிருமிகளுக்கும் தாய் ஒரே வகை தான். கழிவுகளில் இருந்து பிறக்கும் கிருமிகள் தொடரும் கழிவு தேக்கத்தினாலோ ரசாயன மாற்றங்களாலோ வெவ்வேறு உருவங்களாக தன்னை மாற்றிககொள்கின்றன”. 

கிருமிகள் கழிவில் இருந்து உருவாகின்றன. கிருமிகள் கழிவுகளை உண்டு அவற்றை அழித்து இறக்கின்றன. இதில் இருந்து நாம் உடலில் முதலில் கழிவுகள் தோன்றி பின் கிருமிகள் உருவாகின்றன என்பதை புரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு கழிவைப் பொறுத்து ஒரு கிருமி உருவாகிறது. 

நோய்களில் இருந்து விடுதலைப் பெற வழி: 
கிருமிகள் அனைவரையும் தாக்குவதில்லை என்பதற்கு மருத்துவ விஞ்ஞானிகள் கூறும் காரணம் – “எதிர்ப்புசக்தி நன்றாக இருப்பவர்களை கிருமிகள் தாக்காது” என்பதாகும். 

நம் உடலை இயக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் நம் மனதில் அச்சம் மற்றும் பயத்தை தவிர்த்து சமநிலையில் வைத்துக் கொண்டு நம் வாழ்வியல் முறைகளான பசி, தாகம், தூக்கம் மற்றும் ஓய்வை ஒழுங்கு செய்துக் கொண்டு நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தி, கிருமிகளையும் நுண்ணுயிர்களையும் நம்மிடம் நெருங்க விடாமல் நம் உடலை பாதுகாத்து கொள்வோம்.

- பிரியா ஜெயகாந்த்

கருத்துரையிடுக

0 கருத்துகள்