கொரோனா தடுப்பூசி - FACT SHEET என்ன சொல்கிறது?

'ஒரு அரசு அதிகாரி இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டதில்லை. ஏன் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்று கேட்டபோது அவரே சொன்னார். அமெரிக்க தடுப்பூசிக்காகக் காத்திருக்கிறேன் என்றார்.

இந்திய தடுப்பூசியை நம்பமுடியாது இல்லையா.. அதனால் அமெரிக்க தடுப்பூசி போதும் என்று கூறினார். மலையாளிகளான நாம் இப்படித்தான் எல்லா காரியத்திலும் சிரத்தை உள்ளவர்கள். குறிப்பாக தரம் குறித்த விஷயத்தில் கவனமுடன் இருக்கிறோம்.

 ஒரு உணவகத்துக்குச் செல்லும்போது அங்கே அஜினோமோட்டோவோ, ரசாயன பொருட்களோ பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்தால் அங்கு சாப்பிடாமல் திரும்புவோம். அத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அந்த உணவகத்துக்குப் போக வேண்டாம் என்றும் அறிவுறுத்துவோம். ஏனெனில் ஆரோக்கியம் குறித்து அவ்வளவு அக்கறை உள்ளவர்கள் நாம்.

ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்ட போது அதற்கு காரணம் சிகரெட் பயன்படுத்தியதே என்று தெரிந்தது. அவர் அந்த சிகரெட் கம்பெனியின்மீது வழக்கு தொடுத்தால் ஜெயிப்பாரா? ஒருபோதும் இல்லை. காரணம் ஒன்று அந்த நபர் தன் விருப்பத்தின் பேரில்தான் புகைப்பிடித்துள்ளார். யாரும் அவரை நிர்பந்தித்ததில்லை. 

2. சிகரெட் பாக்கெட்டின் மேல் தெளிவாக இது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். புற்றுநோய்க்கோ, மரணத்திற்கோ காரணமாக அமையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு அறிவிப்பு அமெரிக்காவில் உண்டு, சிகரெட்டைப் பற்றியல்ல. கொரோனா தடுப்பூசி குறித்து. 

அமெரிக்காவில் கொடுக்கப்படும் எல்லா தடுப்பூசிகளிலும் fact sheet கட்டாயமானது. ஏனென்று தெரியுமா?காரணம் அங்கு தடுப்பூசிக்கு என ஒரு நீதிமன்றம் இருக்கிறது. 

தடுப்பூசி குறித்த அடிப்படை விவரங்களும், அதை உபயோகிப்பதால் வரக்கூடிய வாய்ப்புள்ள விளைவுகளையும் வெளிப்படுத்தும்விதமாக தெரிவிக்கப்படுவதே  fact sheet இப்போது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் முக்கியமான கம்பெனிகள் இவை 

 Moderna, Jhonson and Jhonson, Pfizer இந்த தடுப்பூசிகளுக்கெல்லாம் FACT SHEET உண்டு. இது FDA இணையத்தளத்தில் உள்ளது. இந்த FACT SHEET களில் என்ன மாதிரியான விளைவுகள் குறிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

எல்லா  FACT SHEETகளிலும் பொதுவாகக் கூறப்பட்டிருக்கும் ஒரு விஷயம்.  இது FDAவால் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசி அல்ல. இது ஒரு டெஸ்டிங் தடுப்பூசி என்று. 

இந்த தடுப்பூசியால் உண்டாகக்கூடிய ஆறு முக்கியமான பின்விளைவுகள் பற்றி இந்த FACT SHEETகளில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. அதை ஒருமுறை பார்க்கலாம். 
1 - Death மரணம். இந்த வாக்சின் எடுப்பதால் மரணம் நிகழலாம்.   
2 - Life Threatening adverse Event. இதையும் சுருக்கமாக மரணம் சம்பவிக்கலாம் என்றே பொருள் கொள்ளலாம். 
3 - Inpatient Hospitalization or prolongation of existing hospitalization.  அதாவது சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அதிக காலம் சிகிச்சைக்கு உட்பட நேரலாம். 
4. A persistent or significant incapacity or substantial disruption of the ability to conduct normal life functions.  normal life functions இது ரொம்ப முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது.  இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்டால் நார்மல் வாழ்க்கையை வாழ்வது மிக கடினம். 
 normal life functions என்பது பிறருடைய உதவியில்லாமல் தன்னிச்சையாக எந்த வேலையையும் செய்ய முடிவது. அதாவது Movement - ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு யாருடைய உதவியும் இல்லாமல் போவது. Movement ஏதாவது ஆபத்து நேரும்போது அதற்கு எதிர்வினையாற்றுவது. உதாரணத்திற்கு உங்கள் கை நீங்களறியாமல் தீயில் பட்டுவிட்டால்  நீங்கள் யோசிக்குமுன்பே சட்டென கையைப் பின்னிக்கு இழுப்பது உடலின் நார்மல் மெக்கானிசம். இவை நிகழாமல் போகலாம்.
Digestion - நாம் சாப்பிட்டவுடன் தானே செரிமானம் நிகழ்வது
Metabolism - ஹார்மோன்கள் சீராக இயங்குவது 
Excretion - உடலிலிருந்து கழிவுகள் வெளியேறுவது 
Reproduction - ஜனன உறுப்புகளின் இயக்கம் 
Growth - வளர்ச்சி 
Movement,  Digestion, Metabolism, Excretion, Reproduction, Growth இந்த ஆறு விஷயங்கள்தான் normal life functions என்று சொல்லப்படுகிறது. இந்த செயல்பாடுகளெல்லாம் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது என்பதையே இந்த ஒரு வாக்கியம் சொல்கிறது. 

5. A congenital Anomaly / Birth defect இதில் முக்கியமாக இந்த தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் எடுக்கவேண்டும் என்கிறது. அதனால் இந்த தடுப்பூசி எடுத்தவர்களுக்கு குறைபாடுகளுடன் கூடிய குழந்தை பிறக்க வாய்ப்புண்டு என்கிறது. 

6. An important medical event that based on appropriate medical judgement may jeopardize the individual and may require medical or surgical intervention to prevent one of the outcomes listed above இந்த பட்டியலில் சொல்லப்பட்டிருக்கும் பின் விளைவுகள் நேராமலிக்க ஒருவேளை அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிவரலாம 

இவை எல்லாம் அமெரிக்காவில் கொடுக்கப்படுகிற அதாவது தரமானது என்று நம்பப்படுகிற தடுப்பூசி மருந்துகளால் உண்டாகக்கூடிய பக்க விளைவுகள் இதே போல Fact sheet நம் நாட்டில் வழங்கப்படும் தடுப்பூசிகளுக்கும் உண்டு. அதில் இவ்வளவு விரிவாக விஷயங்கள் சொல்லப்படவில்லை. 

எல்லாம் ஒற்றை வாக்கியத்தில் சொல்லப்பட்டுவிட்டது. அதாவது சீரியஸ் மற்றும் எதிர்பாராத பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்முடைய நீதித்துறை இதை அனுமதித்திருப்பதே இதற்கு காரணம். இந்த  Fact sheet எதிலும் இந்த தடுப்பூசி போட்டால் கொரோனா தடுக்கப்படும் என்று எந்தக் குறிப்பும் இல்லை. தடுக்கப்படலாம் என்றே இருக்கிறது. 

இதனால் அடையும் பலன்களும் பின்விளைவுகளும் இன்னும் தெளிவாக சொல்லப்படவில்லை. இதைவிட மிக முக்கியமான விஷயம் என்னால் சொல்லாமல் இருக்க முடியாது.

ஜூன் 2021, டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் நம் நாட்டில் கொடுக்கப்படும் கோவிஷீல்டு (ஆஸ்ட்ராஜெனிக்) தடுப்பூசி டென்மார்க், ஆஸ்ட்ரியா, நார்வே, ஐஸ்லேண்ட், பல்கேரியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், தாய்லாந்து உள்ளிட்ட18 நாடுகளில் தற்காலிகமாகவும், நிரந்தமாகவும் தடைசெய்யப்பட்டிருக்கிறது. 

ஏன் தடை செய்யப்பட்டது?  இந்த தடுப்பூசி இரத்த உறைதலை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம், மரணம் நேரக்கூடிய வாய்ப்புள்ளது என்பதே. முன்னரே சொன்னதுபோல் சிகரெட் புகைப்பதால் வரக்கூடிய விளைவுகளுக்கு தனிமனிதர்களே பொறுப்பு என்பது போல எல்லா தடுப்பூசிகளும் நாம் விருப்பப்பட்டால் மட்டுமே போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

அதனால்தான் எல்லா Fact sheet களிலும்  விரும்பினால் போட்டுக்கொள்ளலாம் என்று  தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் பிறகு இனி நீங்கள் தீர்மானிக்கலாம். தடுப்பூசிப் போட்டுக்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை  இது உங்களின் அடிப்படை உரிமை. அதை யாரும் உங்களிடமிருந்து பறிக்க முடியாது. கண்டிப்பாக யாராலும் பறிக்க முடியாது.

உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்'


மூலம் - மலையாளம் - https://youtu.be/hzZj9ut_jHE

தமிழில் - அனு மனோபன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்