பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் மறைந்தார்

சன் மியூசிக்கில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். மரபுக் கலைகளின் மீது கொண்ட காதலால் சிங்கப்பூரிலிருந்து அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து கலைகளைக் கற்று சிங்கப்பூர் மக்களுக்குப் பயிற்றுவித்து வந்தார். 

சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வந்தார். சமீபத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு ஆனந்த கண்ணன் இறந்தார். திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சரோஜா, அதிசய உலகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சிறந்த தொகுப்பாளருக்கான விருதை பலமுறை பெற்றவர். இவர் நடிகர் அஜித்தை  நேர்காணல் செய்தது பற்றி பலமுறை பேசியிருக்கிறார். இண்டர்நேஷனல் யூத் ஐகான் என்ற விருது 2013 ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. டெலிவிஷன் ஆக்டர் ஹில்ட் விருது அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கலைகளின் மீது காதல் கொண்ட இளைஞர். 

அவர் கொரோனாவுக்கு முன் சென்னை வந்தபோது நம் தமிழ் மீடியாவுக்கு வழங்கிய நேர்காணலின் பகுதி - கருத்துரையிடுக

0 கருத்துகள்