’நவரசா’ - முதல் கதை - எதிரி (விமர்சனம்)

பாடினி

இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் நவரசா இன்று நெட்பிளிக்ஸில் ரிலீசாகி இருக்கிறது. ஒன்பது உணர்ச்சிகளைச் சொல்லும் ஒன்பது கதைகள். ஆந்தாலஜியாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த கதைகளும், அவை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளும் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். 

முதல் கதை - எதிரி

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்ற பாடலுடன் தொடங்கும் கதையிது. ரேவதி, பிரகாஷ்ராஜ், விஜய் சேதுபதி, அசோக் செல்வன் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கதை. ஒரு தவறு நிகழ்ந்தபின் அதன் அடுத்தடுத்த நகர்வில் ஒரு கொலை வரைக்கும் கொண்டு செல்லப்படுவதை பேசுகிறது இந்த கதை. எங்கேயாவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒரு தவறின் அடுத்தடுத்த கண்ணிகளை அறுத்துவிட முடிந்தும் அதை செய்யாத இயலாமையை பேசும் கதையில் விஜய் சேதுபதியின் நடிப்பும், ரேவதி மற்றும் பிரகாஷ்ராஜின் நடிப்பும் அசத்தல். திரைக்கதை அமைத்த விதமும், அதன் முடிவும் கூட ’அட’ போட வைத்தது. 

ஒரு மனிதனின் மிகப் பெரிய எதிரி கோபம் என்பதையும், அது ஈகோவிலிருந்து ஆரம்பிப்பதையும் பேசுகிறது இந்த கதை. ’சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி’ என்கிற குறளை நினைவுபடுத்துகிறது. தவறு செய்கிற ஒரு மனிதனின் மனசாட்சி எப்படி அவனை செயல்பட வைக்கிறது என்பதை அழகாக செய்திருக்கிறார் விஜய் சேதுபதி.  

உறவுச் சிக்கலையும், அதிலிருக்கும் முடிச்சுகளையும் வைத்து இயக்குனர் மணி ரத்னம் எழுதியிருக்கும் இந்த கதையை பிஜோய் நம்பியார் இயக்கியிருக்கும் விதமும் பாராட்டப்பட வேண்டியது. கருத்துரையிடுக

0 கருத்துகள்