நவரசா - மூன்றாம் கதை - ப்ராஜெக்ட் அக்னி (விமர்சனம்)

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷனை சொல்லும் கதை. முப்பது நிமிடத்தில் காலம் குறித்து பேசும் கதையின் நகர்வு சிறப்பாக இருக்கிறது. இதில் இருக்கும் ட்விஸ்ட்டும் பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது. இந்த படத்திற்கு இணையத்தில் இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதை ஒரு முழு நீளத் திரைப்படமாக எடுக்கச் சொல்லி கோரிக்கைகளும் வைத்த வண்ணமுள்ளனர். இவர் சூர்யாவை வைத்து இயக்கும் மாறன் படத்திற்கு இதனால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அரவிந்த் சாமியும், பிரசன்னாவும் நல்ல சாய்ஸ். இருவரும் பேசிக்கொள்ளும் காட்சிகள் கிறிஸ்டோபர் நோலன் கதையை நினைவுபடுத்தினாலும் அதை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கும் இயக்குனருக்கும், கச்சிதமாக நடித்திருக்கும் அரவிந்த் சாமிக்கும், பிரசன்னாவுக்கும் பாராட்டுகள்.

இந்த ஆந்தாலஜி கதைகளில் முதல் தரத்தைப் பெறும் கதையாகவும், சுவையாகவும் ப்ராஜெக்ட் அக்னி அமைந்துள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்