ஒரு பள்ளி விழாவுக்கு வரும் முன்னால் மாணவன் பகிர்ந்துகொள்ளும் நினைவுகளாக கதை செல்கிறது. ஆனால் சிரிப்பு என்பது கொஞ்சம் சிக்கலாக வருகிறது. என்னதான் உண்மைச் சம்பவங்களாக இருந்தாலும் அது கதைக்கு எந்தளவுக்கு கைகொடுக்கும் என்பது இந்த படத்தைப் பார்த்தால் புரியும். கடைசிக் காட்சிகள் இப்படித்தான் இருக்கும் என்று முன்னரே யூகிக்கும்படியாக இருக்கிறது.
ரம்யா நம்பீசன் வரும் இடங்களும், அவரது அப்பாவான நெடுமுடி வேணு வரும் இடங்களும், சிறு வயது யோகிபாபுவாக நடித்திருக்கும் கதாபாத்திரமும் கச்சிதமாக கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கின்றனர். இன்னும் கொஞ்சம் புதுமாதிரியாக ஏதேனும் முயற்சித்திருக்கலாம். சில வசனங்கள் முகம் சுழிக்க வைக்கிறது என்றாலும் ஒருமுறை பார்க்கலாம்.
0 கருத்துகள்