No Whats App, No Face Book, No Instagram - Behind the Reason

நோ வாட்ஸப், நோ இன்ஸ்டா, நோ ஃபேஸ்புக்

நேற்று இரவு 9 மணியிலிருந்து வாட்ஸப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் இவை மூன்றும் செயல் இழந்து வேலை செய்யவில்லை. 

முகநூல் நிறுவனம் சமீபத்தில் இன்ஸ்டாகிராமையும், வாட்ஸப்பையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. வாட்சப்பில் புதிய விதிமுறைகளைப் புகுத்தி ஒப்புதல் கேட்டபோது உபயோகிப்பாளர்கள் பலரும் அது குறித்து அதிருப்தியுடன் விவாதித்தனர். 



இந்நிலையில் நேற்று இரவு முதல் வாட்ஸப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் மூன்றும் திடீர் செயலிழப்பைச் சந்தித்துள்ளன. இதனால் உலக அளவில் பல சேவைகள் தடைபட்டிருக்கின்றன. 

இந்த திடீர் செயலிழப்பால் டெலக்ராம், மெயில் உள்ளிட்ட மற்ற தொலைத் தொடர்பு சேவைகள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற சேவைகள் எந்தவிதப் பாதிப்புக்கும் உள்ளாகவில்லை. இதனால் தொழில்நுட்ப வேலைகள் தடையின்றித் தொடர்கின்றன. 

அமெரிக்காவில் Verizon, T-Mobile உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகள் பாதிப்படைந்துள்ளதால் முகநூல் சேவைகளில் தடை ஏற்பட்டுள்ளது. முகநூலில் தடை ஏற்பட்டதால் இன்ஸ்டாவும், வாட்சப்பும் பாதிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நாள் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டால் என்னாகும் என்று பலரும் ட்விட்டர் உள்ளிட்ட மற்ற தளங்களில் கவலை தெரிவித்துள்ளனர். 

செயலிழப்புக்கு என்ன காரணம்?

ஃபேஸ்புக் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் நிறுவனத்துக்குள் நுழைய முடியவில்லை. காரணம் அவர்களின் கார்டு அக்ஸஸ் வேலை செய்யவில்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

என்ன நடக்கும்?

இந்த செயலிழப்பால் ஃபேஸ்புக் அலுவலகம் பாதுகாப்பாகத்தான் இயங்குகிறதா? என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

அடுத்து தனிமனித தகவல்கள் வேறு வகைகளில் பயன்படுத்தப்படுவதற்கு காரணமாக அமையுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் அலுவலகத்தின் இண்டர்னல் அக்ஸஸ் பிரச்சினையால் அனைத்தும் முடங்கியுள்ளது. மீண்டும் அனைத்துக் கணக்குகளும் மீட்கப்படுமா? அல்லது அவ்வளவுதானா? என்ற பதற்றமும் கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது.

நான்கு மணி நேரத்திற்கு மேலாகியும் இந்த செயலிழப்பு மீளமைக்கப்படாமல் இருப்பதால் வேறு சில சிக்கல்களும் உருவாகாலாமோ என்றும் நெட்டிசன்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து டவுண்டிடெக்டர் எனும் தளத்தில் பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

இந்த சேவை பாதிப்புக்கு முகநூல் நிறுவனம் வருத்தம் தெரிவித்திருக்கும் நிலையில் 24 மணி நேரத்திற்குள் சரியாகுமா? என்று பொறுத்திருந்துப் பார்ப்போம். 




கருத்துரையிடுக

0 கருத்துகள்