விண்ணப்பிக்க தகுதிகள்:
1. கொரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்தவராக இருக்க வேண்டும்.
2. ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு, கல்லூரியில் இளங்கலை, முதுகலை வகுப்பு படித்துக் கொண்டிருப்பவராக இருக்க வேண்டும்.
3. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 6,00,000 மிகாமல் இருக்க வேண்டும்.
4. இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
5. 2021-22 மற்றும் 2022-23 கல்வியாண்டில் படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: மருத்துவம் மற்றும் சுற்றுலாத் துறை சார்ந்தத் துறையில் பணியாற்றிய பெற்றோர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சலுகைகள்:
1. ஒன்று முதல் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 24,000
2. ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.30,000
3. இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு ரூ. 50,000
குறிப்பு: இந்த உதவித் தொகை டியூஷன் பீஸ், ஹாஸ்டல் பீஸ், உணவு, இண்டர்நெட், ட்ரெய்னிங் மெட்டீரியல், புத்தகங்கள், எழுதுபொருட்கள், ஆன்லைன் வழி கற்றல் இப்படியான கல்வி தொடர்பான செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
இணைக்க வேண்டிய சான்றுகள்:
1. அரசால் வழங்கப்பட்ட அடையாள சான்றுகள் (ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை)
2. இந்த ஆண்டில் கல்வி படிப்பதற்கான ஏதேனும் ஒரு சான்று (கல்விக் கட்டணம் கட்டியதற்கான சான்று, அட்மிஷன் லெட்டர், மாணவ மாணவியரின் பள்ளி அல்லது கல்லூரி அடையாள அட்டை, போனஃபைட் சான்றிதழ்)
3. பெற்றோரின் இறப்புச் சான்றிதழ்
4. மருத்துவ அல்லது சுற்றுலா துறையில் பெற்றோர் பணியாற்றியதற்கான நற்சான்றிதழ்
5. குடும்பத்தினை நன்கறிந்த பள்ளி ஆசிரியர், மருத்துவர், பள்ளி அல்லது கல்லூரி முதல்வர் அல்லது அரசு அலுவலர் ஒருவரின் பரிந்துரை கடிதம்
6. பெற்றோர் அல்லது மாணவரின் வங்கிக் கணக்கு விவரங்கள்
7. விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
எப்படி விண்ணப்பிப்பது?
www.b4s.in/a/MMTS1 இந்த வலைத்தள முகவரியில் சென்று apply now என்பதை க்ளிக் செய்து விவரங்களைப் பதிவு செய்யவும்
முதலில் உங்கள் மொபைல் நம்பர் அல்லது ஜிமெயில் ஐடி அல்லது ஈமெயில் முகவரியை உள்ளிட்டு பதிவு செய்துகொள்ளவும்
அதன்பின்னர் விண்ணப்பப் பக்கம் திறக்கும். அதில் start application என்பதை க்ளிக் செய்யவும்.
அதில் ஆன்லைன் ஸ்காலர்ஷிப் அப்ளிகேஷன் என்பதை க்ளிக் செய்யவும்.
தேவையான சான்றிதழ்களை பதிவேற்றவும்
Terms and Conditions என்பதை க்ளிக் செய்யவும். ஒருமுறை Preview க்ளிக் செய்துவிட்டு Submit கொடுக்கவும்.
மேலும் விவரங்களுக்கு https://www.buddy4study.com/page/makemytrip-foundation-padhte-raho-badhte-raho-scholarship என்ற தளத்தைப் பார்க்கவும்.
0 கருத்துகள்