தமிழின் பிரபல யூட்யூப் சேனல்கள் ஹேக் செய்யப்பட்டது எப்படி?

தமிழில் வெளிவந்து கொண்டிருக்கும் பதினைந்துக்கும் மேற்பட்ட பிரபல யூட்யூப் சேனல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. பரிதாபங்கள், சோதனைகள் உள்ளிட்ட சேனல்கள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டிருக்கின்றன. 

சேனல்கள் எப்படி ஹேக் செய்யப்படுகின்றன? 
பிரபல சேனல்களுக்கு வரக்கூடிய சில மின்னஞ்சல்களில் ஹேக்கர்ஸ் அனுப்பும் மின்னஞ்சல்களும் இருக்கக்கூடும். உங்கள் சேனலில் வீடியோக்கள் நன்றாக இருக்கின்றன. நாங்கள் உங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட விரும்புகிறோம். எங்கள் கம்பெனியிலிருந்து இலவசமாக வழங்கப்படும் இதனைப் பயன்படுத்தினால் உங்கள் வியூவ்ஸ் அதிகமாகும் என்றெல்லாம் மின்னஞ்சலில் இருக்கும். அதனை ஒருவேளை க்ளிக் செய்துவிட்டால் அதிலிருந்து டவுன்லோடாகும் சில மால்வேர் மூலம் நமது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் கண்காணிக்கப்படும். அனைத்து பாஸ்வேர்ட்களையும் எளிமையாக ஹேக் செய்து எடுத்துவிடுவார்கள். பின்னர் அந்தக் கணக்கிலிருந்து அத்துமீறக்கூடிய லைவ் நிகழ்ச்சிகள் ஏதேனும் செய்ய யூட்யூப் கணக்கை முடக்கிவிடும். இப்படித்தான் இப்போது பல சேனல்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. 

இதற்கு என்ன செய்வது?
அறிமுகமில்லாதவர்களிடம் இருந்து வரும் எந்த மின்னஞ்சல்களையும், அழைப்புகளையும் ஏற்காமல் இருப்பது நல்லது. தப்பித் தவறி அப்படி திறந்துவிட்டால் அதிலிருக்கும் மால்வேர் நமது லேப்டாப்பிலோ, டெஸ்க்டாப்பிலோ வந்தமர்ந்து கொள்ளும். அப்படி நடந்தது தெரியவந்தவுடன் அதனை அழிக்கவோ, நீக்கவோ கடினமான முயற்சி செய்ய வேண்டியிருக்கும்.

சேனல்களை மீட்க முடியுமா?
யூட்யூப்பிற்கு மின்னஞ்சல் செய்து கணக்கை மீட்க வழி இருக்கிறது. ஆனால் இதற்கு சிறிது நாட்கள் ஆகலாம். ஒருவேளை யூட்யூப் கணக்கை டிஆக்டிவேட் செய்துவிட்டால் அதுவும் சிக்கலானதாக மாறிவிடும். ஆனால் அதையும் மீட்கமுடியும். ஆனால் அதிக நாட்கள் ஆகலாம். ஏனெனில் யூட்யூப் ஒவ்வொரு யூட்யூப்பின் கணக்கின் செயல்பாடுகளையும் புரிந்துவைத்திருக்கும். எனவே சேனலை மீட்க முடியும். 

எச்சரிக்கை!
இந்த மாதிரியான சிக்கல் யூட்யூப்பிற்கே சவாலாக இருப்பதால் இனிவரும் காலங்களில் இன்னும் யூட்யூப் கணக்கைப் பலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று யூட்யூபர்கள் தெரிவிக்கிறார்கள். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்