தமிழகத்தில் முழு ஊரடங்கு ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. நாளையிலிருந்து இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல் படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

பேருந்துகள், ரயில்கள், உணவகங்கள், அழகு நிலையங்கள், திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி. 
1- 9 வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. 10, 12 வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  அந்நாட்களில் போக்குவரத்து இருக்காது என்றும், மிக அத்தியாவசிய தேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்