நூலோடு உரையாடு - பகுதி 6
போர், அரசியல், இனப் பகைகள் பற்றிய இந்திய உலக சினிமாக்களின் அறிமுக மற்றும் விமர்சனத் தொகுப்பு இந்த நல்ல நூல். மொத்தம் 27 சினிமாக்கள் பற்றிய 27 கட்டுரைகள். ஒரு சினிமா என்ன சொல்-கிறது; எப்படிச் சொல்கிறது; அந்த சினிமா யார் பக்கம் நிற்கிறது; அந்த சினிமாவின் முக்கியத்துவம் என்ன ஆகியவை பற்றிய எளிமை-யான கட்டுரைகள் இவை. 


சினிமா பற்றிய காத்திரமான பார்வையும் கருத்தும், மொழியும் உள்ளவர் யுகன். கடந்த இருபது ஆண்டுகளாக உலகத்தின் உன்னத-மான சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்த்து ரசித்து அவற்றில் பல-வற்றைத் தமிழில் நூல் வடிவத்தில் தந்தவர். நம் தமிழ்ச் சூழலில் அந்த உலக சினிமாக்கள் போல ஒன்றேனும் வந்து-விடாதா என்று தொடர்ந்து ஆசைப்பட்டுக்கொண்டு இருப்பவர். அதற்காக அச்சு ஊடகத்திலும் உழைத்துக்-கொண்டி-ருக்கிறார். 


இந்தப் புத்தகத்தைத் தோய்ந்து படித்த வாசகர், கண்டிப்-பாக நல்ல சினிமா பற்றிய உணர்வைப் பெறுவார், நல்ல உலக-சினிமா பக்கம் நகர்வார் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். அதுவே இந்த நூலின் நோக்கம்.

- பிரபஞ்சன்


நிழல் படம் நிஜப் படம் (அரசியல் சினிமா)

யுகன்

ரூ. 200அண்மைக்காலத்து வரலாற்றில் இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.


தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல்கிறது. காதலை, நட்பை, உயிர் கலந்த உறவுகளை, சமூக நேசத் தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.

உலகத்தின் யுத்தகாலக் கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும்.


பார்த்தீனியம் (நாவல்)

தமிழ்நதி

ரூ. 450


உலுக்குகிறது பறை இசை. விடுதலைக் களிப்போடு துள்ளிக் குதித்து குருதியில் ஒலி மதுவாய் பரவுகிறது. பறை வழியவிடும் இசைமதுவின் போதையில் நான் ஆடுகிறேன். ஒரு கணம்தான். அந்தத் துள்ளிசையின் வசீகரச் சுழலிலிருந்து  தப்பித்துக்கொள்ள முயல்கிறேன். எம் மூதாதையரின் பறையொழிப்புப் போராட்ட நினைவுகள் என்னைச் சூழ்கின்றன. இப்போது பறையிசை என்னை சினம்கொள்ளச் செய்து மூளையைத் தெறிக்கவிடுகிறது. பறை  தோற்கருவிகளின் பொதுப்பெயர். ஆனால், அது சிலர் மட்டுமே இசைத்திடும் கருவியாக  எப்படிச் சாதியோடு பிணைக்கப்பட்டது?


இசையில் சுதி வேறுபாடு இருக்கலாம். சாதி வேறுபாடும் இருக்குமா? பறையை சாதியோடு பிணைத்திருப்பது ஒரு சதி. இது அனைவரும் அறிந்தது. ஆனால், விளக்கங்களைச் சொல்லிக் கொண்டிருப்பதற்கு இது  நேரமில்லை. என் கையில் திணிக்கப்பட்ட பறையை நட்ட நடுவெளியில் வீசியெறிகிறேன். அது சமமின்மையை உலுக்கும் வல்லிசையைக் காற்றில் பரவச்செய்யும். நான் என்னிடமுள்ள தோற்கருவிகளை எரித்துக் குளிர்காய்ந்தபடி அதை உணர்ந்துகொண்டிருப்பேன்.


- அழகிய பெரியவன்      


வல்லிசை (நாவல்)

அழகிய பெரியவன்


ரூ. 240

புத்தகங்கள் கிடைக்குமிடம்
நற்றிணை பதிப்பகம், சென்னை

கருத்துரையிடுக

0 கருத்துகள்