நூலோடு உரையாடு - பகுதி 1பொடிசி


குழந்தைகளுக்கான லெனின் கதை
மிக்கெயில் ஜாஷ்சென்கோ
தமிழில் – ஆதி வள்ளியப்பன்

சமநிலை சமுதாயத்தைக் கனவு காண்கிற உள்ளங்களில் நிலைத்திருக்கும் பொதுவுடைமைக் கோட்பாட்டாளரும், புரட்சியாளருமான லெனினின் வாழ்க்கையைச் சொல்லும் நூல். குழந்தைகளிடம் லெனினை அறிமுகப்படுத்தவும், அதனூடாக சமூகத்தை நேசிக்கவும் இந்த நூல் உதவும். 


ஜிமாவின் கைபேசி
கொ.மா.கோ.இளங்கோ

ஜிமாவுக்கு கிடைக்கும் புதிய வகை கைபேசி ஜிமாவுக்கு ஆலோசனைகள் வழங்குவதும், பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்பதும், அறிவியல் குறித்து விளக்குவதும் என கதையாக விரிகிறது. குழந்தைகளுக்கு சுவாரசியமும், நிகழ் வாழ்விற்கு பயனுள்ளதாகவும், அன்றாட வாழ்வின் அறிவியல் குறித்து அறிவதற்குமான பயனுள்ள நூல். கரும்பலகைக் கதைகள்
புதுச்சேரி அன்பழகன்

குழந்தைகளுக்கான அறிவியல் சிறுகதைகள் அடங்கிய இந்த நூல் அறிவியல் ஆசிரியர்களுக்கான ஒரு வழிகாட்டுதலும் கூட. குழந்தைகள் கேள்வி கேட்டால் அதனை அணுகுவது எப்படி? என்பதையும், குழந்தைகளுக்கான பாடத் திட்டத்தை மட்டுமல்ல, பாடம் படிக்கும் இடத்தையும்கூட மாற்றியமையுங்கள். குழந்தைகளுக்குச் செய்யும் முதல் உதவி இதுதான் என்பதையும் சொல்கிறது இந்த நூல். 


கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா?
ஸ்ரீரசா

குழந்தைகளுக்கான திரைப்படங்களைப் பற்றிப் பேசும் நூல் இது. குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட உலகளவிலான திரைப்படங்களை பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. நல்ல திரைப்படங்களைப் பார்க்க வைப்பதன் மூலம் குழந்தைகளின் உலகில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்த்துகிறது. 


கதைடாஸ்கோப்
ஆயிஷா இரா. நடராசன்

குழந்தைகள் உலகில் அதிகமான புனைவின் வழி அறிவியலையும், அறவியலையும் கொண்டு சேர்க்கும்விதமான குட்டிக் குட்டிக் கதைகளைக் கொண்ட நூல் இது. 

புத்தகங்கள் கிடைக்குமிடம்

புக்ஸ் ஃபார் சில்ட்ரன்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 18
044 - 24332424


கருத்துரையிடுக

0 கருத்துகள்