பொடிசி
இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ வேண்டும். எந்த உயிர் அழிந்தாலும் பூமியின் உயிர்ச்சூழலில் ஒரு கண்ணி அறுபடும். அதனால் சமாதான சகவாழ்வை வாழ வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில் சந்தோஷத்தை ஏற்படுத்தி ஆனந்தமாக உணரவைக்கும் கதைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.
மார்க் ட்வைன் என்கிற பிரபல எழுத்தாளரின் கதையை தமிழுக்குத் தந்திருக்கிறார் எழுத்தாளர் சுகுமாரன். மார்க் எழுதிய டாம் சாயரின் சாகசங்கள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி தொடராகவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு குதூகலத்தை அளிக்கக்கூடிய நூலில் இதுவும் ஒன்று.
டாம் சயரின் சாகசங்கள்
நம் சமூகத்தில் குழந்தைகள் மீதான வன்முறை கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் பரவிக்கிடக்கின்றன. குழந்தைகளுக்கு அவர்களது உடல்பற்றியும், உரிமைகள் பற்றியும் சொல்லித் தருவது கடமையாகிறது. குழந்தைகள் தன்னிடம் அத்துமீறுவோரைப் பற்றி வெளிப்படையாக பெற்றோரிடம் பேசும் தைரியத்தை புனைவின் வழி அளிக்கிறது இந்த நூல்.
ஆசிரியராக தன் அனுபவத்தில் கற்றலில், கற்பித்தலில், கண்ட சிரமங்களை அடையாளப்படுத்துவதோடு மாணவர்களை மதிப்பெண் அடிப்படையில் தரம்பிரிப்பதையும் மறுக்கும் சிவா தன் வாசிப்பிலிருந்து தனக்கான தனித்துவமிக்க கற்பித்தல் அணுகுமுறையை இக்கட்டுரைகள் காட்டுகின்றன.
ரகசிய கோழி
உதயசங்கர்
பக்கம் - 96
விலை - 60 ரூ
வானம் பதிப்பகம், சென்னை
டாம் சயரின் சாகசங்கள்
மார்க் ட்வைன்
தமிழில் - சுகுமாரன்
தமிழில் - சுகுமாரன்
பக்கம் - 96
விலை - 60 ரூ
வானம் பதிப்பகம், சென்னை
மரப்பாச்சி சொன்ன ரகசியம்
யெஸ்.பாலபாரதி
பக்கம் - 88
விலை - 60 ரூ
வானம் பதிப்பகம், சென்னை
கல்வியினாலாய பயனென்கொல்?
கலகல வகுப்பறை சிவா
பக்கம் - 68
விலை - 60 ரூ
நீலாங்குருவி பதிப்பகம், சென்னை
0 கருத்துகள்