நூலோடு உரையாடு - பகுதி 4


பொடிசி

                                                                            


புதையல் டைரி
யெஸ். பாலபாரதி
பக்கம் - 64
விலை - 50 

ஒரு புதையலைப் பற்றி தனது தாத்தா எழுதி வைத்திருக்கும் டைரி ஜான்சனுக்குக் கிடைக்கிறது. அதிலிருக்கும் புதிர்களுக்கான விடைகளைத் தன் நண்பர்களின் உதவியுடன் கண்டுபிடிக்க முயல்கிறான். விடைகள் காட்டும் வழியில் பயணிக்க அவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கின்றன. கடைசியில் அவர்களுக்கு அந்த புதையல் கிடைத்ததா? என்பதே கதை.
உலகை உலுக்கிய 40 சிறுவர்கள்
ஆயிஷா இரா.நடராசன்
பக்கம் - 112
விலை - 90  

வகுப்பில் காணாமல் போய் ஆய்வகத்தில் கண்டெடுக்கப்பட்ட மாணவனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒரே  வருடத்தில் நான்கு வகுப்புகள் தாவிய சிறுவனைப் பற்றி தெரியுமா? விடுமுறை நாட்களில் ஏழைகளோடு வாழச் சென்ற சிறுமியைப் பற்றி அறிவீர்களா? இதுபோன்ற உலகை உலுக்கிய 40 சிறுவர்களைப் பற்றிய அறிமுகத்தை இந்த நூலில் பெறலாம்.ஒரு நாயின் கதை
பிரேம்சந்த்
தமிழில் – யூமா வாசுகி
பக்கம் - 48
விலை - 30

தன் அறிவாலும் ஆற்றலாலும் மனிதர்களுக்கு வியப்பூட்டும் கல்லு எனும் நாய்க்குட்டி தன் கதையைச் சொல்வதை பிரேம்சந்த் எழுதியிருக்கிறார். வெளிப்பார்வைக்கு நாயாகவும், மனதளவில் குழந்தையாகவும் இருக்கிற நாயின் கதை ராஜா ராணிக் கதைகளைப் போன்றோ, வீர தீர கதைகளைப் போன்றோ இல்லாமல் மிக எளிய கதையாக இருக்கிறது.


                                                        

கறுப்பழகன்
அன்னா சிவெல்
தமிழில் – யூமா வாசுகி
பக்கம் - 208
விலை – 130

அன்பும் அறிவும் வலிமையுமிக்க குதிரை பல எஜமானர்களையும், பல மனிதர்களையும் சந்திக்கிறது. அந்த நெடிய வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அதற்கு ஏற்படும் பல அனுபவங்களை விவரிப்பதே இந்த நூல். ஒரு குதிரை தன் வரலாறு கூறுவதைப் போல அமைந்திருக்கும் இந்த நாவலில் மிகவும் வித்தியாசமான கதைக் களனையும், மிக அரிய ஒரு கதாநாயகனையும் தரிசிக்க முடியும். 

                

                                                        


தாத்தாவின் தூண்டில்

நிகோலாய் நொசொவ்
தமிழில் – சரவணன் பார்த்தசாரதி
பக்கம் - 32
விலை - 30

விடுமுறையின்போது தாத்தா வீட்டிற்கு சென்ற இரண்டு சிறுவர்களின் குறும்புத்தனங்களைப் பற்றிய கதை இது. நகரும் தொப்பி, தாத்தாவின் தூண்டில் ஆகிய இரண்டு கதைகளை படங்களுடன் பெரிய எழுத்துகளில் அச்சிட்டிருப்பது சிறுவர்களை ஒரே மூச்சில் படித்துவிட தூண்டுவதாக இருக்கிறது.கருத்துரையிடுக

0 கருத்துகள்