விரும்புவோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்துக - மத்திய அரசுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தல்

பெரும்தொற்றான கொரோனா வைரஸை தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி என கட்டாய தடுப்பூசி திணிப்பை  கையில் எடுத்திருக்கும் அரசு,அதன் பாதகங்களை பற்றி மக்களுக்கு எடுத்துரைத்தோ,அதன் விளைவுகளுக்கு தாங்கள் பொறுப்பெடுத்துக் கொள்வதாகவோ எந்த உத்தரவாதமும் கொடுக்காமல்,   மக்களிடத்தில் எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் பொறுப்பற்று நடப்பதை எதிர்க்க எந்த அமைப்போ, இயக்கமோ முன்வராமல் மௌனம் காக்கின்ற வேளையில் தமிழ்த்  தேசியப்பேரியக்கம் முன்னெடுத்த கட்டாய தடுப்பூசிக்கு எதிரான ஒன்றுகூடல்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 11.1.22 அன்று மாலை நடந்தது. 

இந்த ஒன்றுகூடலிற்கு தலைமை ஏற்று நடத்தியவர் தமிழ்த் தேசியப் பெரியக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள். இந்த ஒன்றுகூடலில் முக்கிய தீர்மானமாக அவர்கள் வைத்தது,தடுப்பூசியை சட்டவிரோதமாக திணிக்காதே, விரும்புபவர்களுக்கு மட்டும் தடுப்பூசி செலுத்த ஆணை, தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எந்த வித உரிமையையும் பறிக்கக் கூடாது, தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பேசினார். 

இந்த ஒன்றுகூடலில் அலோபதி மருத்துவர் ஹரிசங்கர்,ஹோமியோபதி மருத்துவர் கோ.பிரேமா,அக்குஹீலர் அ.உமர் பாரூக் மற்றும் அக்குஹீலர் அருள்ராஜ் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

இந்த ஒன்றுகூடலில் அலோபதி மருத்துவர் ஹரிசங்கர்,ஹோமியோபதி மருத்துவர் கோ.பிரேமா,அக்குஹீலர் அ.உமர் பாரூக் மற்றும் அக்குஹீலர் அருள்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்தப் போராட்டத்திற்கு அரசு அனுமதியளிக்காத நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை கைது செய்து மண்டபத்தில் வைத்தனர் காவல்துறை. அப்போது கண்டன உரை நிகழ்த்தப்பட்டது.

முதலில் பேசிய ஹோமியோபதி மருத்துவர் பிரேமா அவர்கள், ’கொரோனா  தடுப்பூசியின் விளைவுகளால் ஏற்படும் திடீர் மரணங்களை பற்றிய எந்த தரவுகளையும் அரசு சேகரிக்காமல் இருப்பதை சாடினார். தடுப்பூசியை பற்றிய போதிய அறிவில்லாத மருத்துவர்கள் திடீர் மரணங்களுக்கு காரணமாக மாரடைப்பு, பரோட்டா சாப்பிட்டதால் இறப்பு, அதிக உடற்பயிற்சி செய்வதால் இறப்பு என சொல்லுவதை ஏற்க முடியாது என்தையு,ம் இந்த காரணங்களாலேயே இங்கிலாந்து மருத்துவ பத்திரிக்கைகளில் இந்திய மருத்துவர்களின் 'மருத்துவ அறிவு' குறைவாக இருப்பதை  குறிப்பிடுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். 

வெளிநாடுகளில் தடுப்பூசி பாதகங்களை எவ்வாறு முறைப்படுத்துகிறார்கள் என்பதையும், அதில் இந்திய அரசு காட்டும் மெத்தன போக்கையும் வேறுபடுத்தி பேசினார். முக்கியமாக தடுப்பூசியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்க அரசு ஆவண செய்யவும் வலியுறுத்தினார். தடுப்பூசியின் உண்மையான அறிவியலை மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி, மக்கள் தடுப்பூசி மரணங்கள் பற்றிய  புகார்களை எந்த தயக்கமுமின்றி செய்யும் அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறினார்.

அடுத்ததாக, ‘99% கொரோனா தொற்று ஏற்பட்ட மக்கள் தாங்களாகவே சரியாகின்றனர், 1% மக்களே இறப்பை தழுவியுள்ளனர், அதுவும் பல இணைநோய்கள், மருத்துவ குறுக்கீடுகள் காரணங்களாக இருப்பதாக WHO அமைப்பின் தரவுகளை முன்னிறுத்தி பேசினார் அக்குஹீலர் அருள்ராஜ் அவர்கள்.  ‘மரபுவழி மருத்துவத்தின் வழியாக பல கொரோனா நோயாளிகள் குணமானதை மறைத்து தடுப்பூசித் திணிப்பை மட்டுமே அரசு  பிரதானமாக செய்வதைக் கூறி,பல வருடங்கள் பரிசோதித்த தடுப்பூசிகளே, பலதரப்பட்ட ஆய்வுக்கு பின்னும் நீக்கும் நிலையில், பரிசோதனை நிலையில் இருக்கும் கொரானா தடுப்பூசியை மக்களுக்கு செலுத்துவது எந்த விதத்தில் நியாயம்’ எனக் கேள்வி எழுப்பினார். குழந்தைகளுக்கான கட்டாய தடுப்பூசி திணிப்பால்,தடுப்பூசி போட விரும்பாத குழந்தைகளை வகுப்பில் ஒதுக்கி வைக்கும் நவீன தீண்டாமை வருந்தத்தக்கது என ஆதங்கப்பட்டார்.

 ‘பெரும்பான்மை மக்களுக்கு அடிப்படை வசதிகளை கொண்டு செல்ல முடியாத அரசு 80% மக்களுக்கு கொரோனா தடுப்பூசிப் போட்டதாக கூறுவது முற்றிலும் உண்மை கிடையாது’ என்பதை ஆணித்தரமாக பதிவு செய்தார் அலோபதி மருத்துவர் ஹரிசங்க.ர்  அவர்கள். நவீன மருத்துவத்திற்கு எதிராக குரல்  கொடுக்கும் தனக்கு நண்பர்கள் முதல் பணி செய்யும் இடம் வரை ஏற்பட்ட சவால்களை எடுத்துரைத்தார். ‘அனைத்து வைரஸ்களும் உருமாற்றம் அடையக் கூடியவை, அப்படி உருமாறும்போது அதன் வீரியம் குறையும் என்பதால் நிரந்தர தடுப்பூசி கண்டுபிடிக்க முடியாது’  என்ற உண்மையை விளக்கினார். அதனாலேயே அதிகமாக தடுப்பூசி போட்ட நாடுகளில் அதிகமான அளவு வைரஸ் உருமாற்றமடைந்து வேகமாக பரவி மறுபடி கொரோனா பரவுவதாக கூறினார்.

அடுத்து பேசிய அக்குஹீலர் அ.உமர்பாரூக் அவர்கள், ’தடுப்பூசியால் வைரஸ்களின் உருமாறும் தன்மையை சில எடுத்துக்கட்டுடன் விளக்கி, அரசு மக்களை அச்சமூட்டுவதை நிறுத்தி சிகிச்சை முறைகளில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தை எடுத்துரைத்தார். நம் மருத்துவப் பாடத்திட்டத்தில் உள்ள பாரம்பரிய மருத்துவத்தை சுருக்கிவிட்டு, அலோபதி என்ற ஒற்றை மருத்துவத்தை அனைத்து மக்களுமான மருத்துவமாக திணிக்கும் சர்வாதிகார போக்கை இந்த அரசு விடவேண்டிய அவசியத்தை  வலியுறுத்தினார். அலோபதி மருத்துவத்திற்கும், மரபுவழி மருத்துவத்திற்கும் உள்ளப் பாகுபாட்டை பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே கடைபிடித்து வந்த காரணத்தால், இன்று மரபுவழி மருத்துவத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர மறுக்கின்றனர். மரபுவழி மருத்துவத்தின் வரலாற்றை மறைத்து, அதற்கு எதிரான பழைய சட்டங்களை தூசி தட்டி அதை பிரயோகிக்கும் இன்றைய அரசை கேள்விக்குட்படுத்த வேண்டிய நீதிமன்றங்கள் அமைதி காப்பதும், இந்திய சாசனப்படி எது சரியானது என்பதை மக்களுக்கு புரிய வைக்கவேண்டும் இடத்தில் வழக்கறிஞர்கள் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். போலி அறிவியலாக கருதப்படும் தடுப்பூசி பற்றிய முழு விவரங்களை நவீன மருத்துவர்கள் பொதுவெளிக்கு வந்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டிய அவசியத்தை குறிப்பிட்டார். அவரவர் மருத்துவ உரிமையை அவரவரே தீர்மானிக்க வேண்டும்’ என்று கூறி தன் உரையை முடித்தார்.
இறுதியாக பேசிய தமிழ்த் தேசியப் பேரியக்கப்  பொதுச்செயலாளர் கி.வெங்கடராமன் அவர்கள் இந்த ஒன்றுகூடலை தொடர் போராட்டமாக எடுத்துச்செல்ல வேண்டியதன்  அவசியத்தை  வலியுறுத்தி நிறைவு செய்தார்.


தொகுப்பு : ஹேமலதா 

கருத்துரையிடுக

0 கருத்துகள்