நூலோடு உரையாடு - பகுதி 5

பொடிசி 



அண்டா மழை
உதய சங்கர்
பக்கம் – 72
விலை – 50 ரூ

சிறுவர்களுக்கான கதைகளை சுவாரசியமாக சொல்லக்கூடியவர் உதயசங்கர். அவருடைய அண்டா மழை தொகுப்பில் இருக்கும் கதைகள் வாசிப்பைத் தூண்டக்கூடியவை. அதிலும் 420 தீவு ராஜா 421 அரசாங்கத்துக்கு எதிராக யாராவது யோசித்தாலே கைது செய்துவிடுவார் எனும்போது சிறுவர்களுக்கு வாசிப்பதற்கான விறுவிறுப்பை ஏற்படுத்துகிறார்.


ஜெமீமா வாத்து 
பயாட்ரிக்ஸ் பாட்டர்
தமிழில் – சரவணன் பார்த்தசாரதி
பக்கம் – 72
விலை – 60 ரூ

 நாம் வாசிக்கும் கதை புத்தகங்களுக்கு வயசாகலாம். ஆனால் அதில் வரும் கதாபாத்திரங்களுக்கு வயதாவதில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பீட்டர், பெஞ்சமின் முயல்களும், ஜெமீமா வாத்தும் ஏனைய விலங்குகளுக்கு அவை வாழ்ந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. வாசிப்பின் பயணத்தை நீட்டிக்கச் செய்யும் நூலில் ஜெமீமா வாத்தும் ஒன்று. 

                                  

ஹெய்தி
ஜெகன்னா ஸ்பைரி
தமிழில் - சுகுமாரன்
பக்கம் – 96
விலை – 60 ரூ

தாத்தாவுக்கும் பேத்திக்குமான பாசப்பிணைப்பை அழகாக எடுத்துக்கூறும் இந்த நாவலை ஜெகன்னா ஸ்பைரி எழுதியிருக்கிறார். இது திரைப்படமாகவும் வந்து பெரிய வெற்றிபெற்றது. தமிழுக்கு மாற்றி தந்திருப்பவர் கவிஞர் சுகுமாரன். பாசத்தின் மாண்பை பேசும் ஹெய்தி நாவலை வாசித்து மகிழலாம்.

                                    


ஒரு பூ ஒரு பூதம்
மருதன்

பக்கம் – 92
விலை – 50 ரூ

 ஒவ்வொரு பூவும் ஒரு புத்தகம். ஒவ்வொரு புத்தகமும் ஒரு பூ. உங்கள் அலமாரியை அலங்கரிக்கும் பூக்களை நீங்களே தேர்வு செய்யலாம். அதற்கு செய்யவேண்டியதெல்லாம் தேடித் தேடிப் பூக்களைச் சேகரிப்பதுபோல் புத்தகங்களை சேகரிப்பதுதான். இந்த புத்தகமும் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும் நூலில் ஒன்றே.


புத்தகங்களைப் பெற 
வானம் பதிப்பகம், சென்னை   

கருத்துரையிடுக

0 கருத்துகள்