பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை சென்னை புத்தக் காட்சி

2022 பிப்ரவரி 16 முதல் மார்ச் 6 வரை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் 45 ஆவது சென்னைப் புத்தகக் காட்சியை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கின்றார்கள்.

புத்தகக் காட்சிக்கான அழைப்பிதழை தமிழக முதல்வர் அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து பபாசியின் தலைவர் திரு வயிரவன், செயலாளர் எஸ்.கே. முருகன், பொருளாளர் குமரன், துணைத்தலைவர் மயிலவேலன், இணைச் செயலாளர் எஸ். பழனி, துணை இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினார்கள்.

புத்தகக் காட்சி தொடக்கவிழா நிகழ்வில் 2022 ஆம் ஆண்டிற்கான முத்தமிழறிஞர் கலைஞர்  மு. கருணாநிதி பொற்கிழி விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விருதாளர்களுக்கும்,, சிறந்த பதிப்பாளர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் விருதுகளை வழங்குகிறார்.

முத்தமிழறிஞர் கலைஞர்  மு. கருணாநிதி பொற்கிழி விருது பெறுபவர்கள் 
உரைநடை: சமஸ்; நாடகம்: ப்ரஸன்னா ராமசாமி; கவிதை: ஆசைத்தம்பி (ஆசை); புதினம்: அ. வெண்ணிலா; பிறமொழி: பால் சக்கரியா; ஆங்கிலம்: மீனா கந்தசாமி, சிறந்த பதிப்பாளருக்கான பதிப்பகச் செம்மல் விருது; ச.மெ. மீனாட்சி சோமசுந்தரம் (மணிவாசகர் பதிப்பகம்) ரவி தமிழ்வாணன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பன் விருது நாதம் கீதம் புக் செல்லர்ஸ், சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான கவிஞர் அழ. வள்ளியப்பா விருது திருவை பாபு, சிறந்த தமிழறிஞருக்கான பாரி செல்லப்பனார் விருது முனைவர் தேவிரா, சிறந்த பெண் எழுத்தாளருக்கான பதிப்பாளர் அம்சவேணி பெரியண்ணன் விருது திருமதி. பாரதி பாஸ்கர், சிறுவர் அறிவியல் நூலுக்கான நெல்லை சு.முத்து விருது கு.வை.பாலசுப்பிரமணியன் ஆகியோர் பெறுகிறார்கள்

புத்தகக் காட்சி காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். பள்ளி மாணவர்களுக்கு இலவச டிக்கெட் வழங்கப்பட்டுவருகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்