நூலோடு உரையாடு - பகுதி 3

பொடிசி

டோரா வரை
கார்ட்டூன் நாயகர்களுடன் சந்திப்பு
ஆயிஷா இரா.நடராசன்
பக்கம் - 96
விலை - 70

சோட்டா பீம், கிருஷ்ணா & பலராம், ஹெய்டி, காட்ஸிலா, ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் என கார்ட்டூன் கதாபாத்திரங்களை சந்தித்து அவர்களைப் பற்றி அறிந்துகொள்கிற ஒரு புனைவு நூல் இது. 


வரி வாங்கிய புலி
சில்வியா ரொமேரா
தமிழில் – ஜி. சரண்
பக்கம் - 64
விலை - 50

ஒருவர் மீது அன்பு செலுத்த வேண்டியது எவ்வளவு அவசியமோ அதே அளவு அறிவோடும் இருக்க வேண்டியது அவசியம் என்று கூறும் கதைகள் இவை. இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் குழந்தைகளின் உளவியல், மூளை நரம்பியல் மற்றும் அவை சார்ந்த தகவலியம் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மாஷாவின் மாயக்கட்டில்
கலினா லெபெதெவா
தமிழில் – கொ.மா.கோ.இளங்கோ
பக்கம் - 32
விலை - 30

மாஷா குட்டிக்கு கட்டிலில் படுத்து உறங்கப் பிடிக்கவில்லை. இரவு நேரம் என்று பாராமல் வெளியே கிளம்பிச் செல்கிறாள். நாய், சேவல், வெளவால், நாரை என ஒவ்வொன்றும் மாஷாவைத் தன்னுடன் தூங்க அழைக்கிறது. அன்றைய இரவு மாஷா எதிர்கொண்ட அனுபவங்களே இந்த கதைகள். 

அப்பா சிறுவனாக இருந்தபோது
அலக்ஸாண்டர் ரஸ்கின்
தமிழில் – நா. முகம்மது செரீபு
பக்கம் - 128
விலை - 110  

சாஷாவுக்கு கடுமையான காதுவலி. அவள் அழும் சமயங்களில் எல்லாம் அவளது அப்பா தான் சிறுவனாக இருந்தபோது நடந்த கதையைச் சொல்கிறார். இப்படி தனது மகள் அழும்போதெல்லாம் தனது நினைவுக் கிடங்கில் இருந்து மீளச் செய்த கதைகளை நூலாக்கி இருக்கிறார் ரஸ்கின். ஒவ்வொரு அப்பாவும் சிறுவனாக இருந்திருக்கும்போது எவ்வளவோ நிகழ்வுகளைக் கடந்திருக்க கூடும். அவற்றில் இருந்து குழந்தைகளுக்கான கதையை உருவாக்கலாம்.


கடல்ல்ல்ல்ல்
விழியன்
பக்கம் - 48
விலை - 40 
 

கடல் என்ற வார்த்தையைக் கேட்டது முதல் அங்கே போகத் துடிக்கின்ற நண்பர்களின் காட்டுவழிப் பயணமே கடல்ல்ல்ல்ல். வழியில் சந்தித்த அனுபவங்களும் புதிய நண்பர்களுமென குழந்தைகளை குதூகலப்படுத்தும் நூல் இது.கருத்துரையிடுக

0 கருத்துகள்