மரு.வீ.புகழேந்தி

12-14 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி-காற்றில் பறக்கவிடப்பட்ட அறிவியல் வாதங்கள் - ஜனநாயகம் மறுத்து அறிவியல் வாதங்களை முன்வைக்காமல் "கொள்கை முடிவு" என மழுப்பும் அரசு-உண்மையை மறைக்கும் மத்திய அரசு-துணை போகும் மாநில அரசு- மக்களே சிந்திப்பீர்- மத்திய அரசும்/தமிழக அரசும் இன்று முதல் (16.3.22)12-14 வயதினருக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கு கட்டாய கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்க உள்ளது. ஆனால் ஆரம்பமே சர்ச்சைகள் இந்த விசயத்தில் அதிகமாக இருப்பதோடு, எவ்வாறு அறிவியல் மழுங்கடிக்கப்பட்டுள்ளது எனும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. உதாரணமாக, மத்திய தடுப்பூசி பரிந்துரைக் குழுவின் முக்கிய உறுப்பினர், மரு.ஜெயபிரகாஷ் முலியேல், அக்குழு, 15 வயதினருக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை பரிந்துரைக்கவில்லை எனும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டதுடன், 12-14 வயது இணைநோய்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினால் உயிரிழப்பை தடுக்கும் என சொல்வதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என தெளிவுபட கூறியதுடன், ஓமிக்ரான் அலையால் குழந்தைகள் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டு இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றிருப்பதால், உறுதியான, தெளிவான தடுப்பூசியின் பலன் நிரூபிக்கப்படாமல் இருப்பதால் தடுப்பூசியே தேவையில்லை என்றே வலியுறுத்துகிறார். கோவேக்சின் ஆய்வில் ஈடுபட்ட மரு.சஞ்சய்ராய் அவர்கள், இயற்கை நோய் எதிர்ப்புத்திறன் பெற்ற குழந்தைகளுக்கு தடுப்பூசி கொடுப்பதால் கூடுதல் பலன் கிடைக்கும் எனும் ஆய்வு முடிவுகள் இல்லாதபோதும், சாதக/பாதகங்களை கணக்கிட்டால் குழந்தைகளுக்கான தடுப்பூசி பாதகங்களை அதிகம் ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாலும் அது தேவையில்லை என்றே கூறுகிறார். மத்திய அரசு மரு.ஜெயபிரகாஷ் முலியேலின் கூற்றான "தடுப்பூசி பரிந்துரைக் குழுவின் அனுமதியின்று அரசு தடுப்பூசி செலுத்த உத்தரவிட்டுள்ளது" குறித்து வருந்துகிறேன் என செய்தி வெளியிட்டதை மறுத்து ,மூன்று மாதங்களுக்கு முன்னரே, தடுப்பூசி பரிந்துரைக் குழு கூட்டத்தில் இணைநோய்கள் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி தேவைப்படும்போது கொடுக்கப்படும் எனும் முடிவை சுட்டிக்காட்டினாலும், அனைத்து குழந்தைகளுக்கும் அது கொடுக்கப்பட வேண்டும் என்று இல்லாததை அரசு ஏன் மறைக்க வேண்டும்.?(ஜெயபிரகாஷ் முலியேல் அவர்கள் இணைநோய் உள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி உயிரிழப்பைத் தடுக்கும் என்பதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை என்றே சொல்கிறார்.) ஆக, பிரச்சனையை அறிவியல்ரீதியாக எதிர்கொள்ளத் தயங்கும் அரசு, நிபுணர்கள் சொல்வதைக் கேட்காமல், அதை ஓரங்கட்ட, உச்சநீதிமன்றத்தில், 12-14 வயதினருக்கு அரசு தடுப்பூசிகொடுக்க தீர்மானித்திருப்பது அரசின் கொள்கை முடிவு என்றும், நீதிமன்றங்கள் அதில் தலையிட முடியாது என்றும் வாதிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழக்கில் திரு.பிரசாந்த் பூசன் அவர்களின் முக்கிய வாதம்-"அரசியலமைப்பு சட்டப்படி சாதக/பாதகங்களை அறிந்து தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உள்ளபோது(Informed consent) ,அவற்றை தெரியப்படுத்தாமல், பொதுவெளியில் வைக்காமல், தடுப்பூசி செலுத்துவது சட்டத்தை மீறிய செயல்" என்பதாகும். அது சிறந்த வாதம். இத்தகைய சட்டரீதியான உரிமைகளை மறுக்க, எதிர்கொள்ளாமல் தப்பிக்க, "அரசின் கொள்கை முடிவு"என அரசு வாதிடுவது ஜனநாயகத்தை மீறும் செயல். மரு.சஞ்சய்ராயின் வாதமும் சிறப்பானது. அரசு கொள்கை முடிவு எனக் கூறும்போது, அதற்கான குறிக்கோளை(Objective) தெளிவுபடுத்தாமல் இருப்பது நியாயமல்ல என கேள்வி எழுப்பி உள்ளார். உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு மார்ச் 21ம் தேதி வரஉள்ளது. ஆக, மத்திய/மாநில அரசுகள் அறிவியலை மதிக்காமலும், இணைநோய் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் தடுப்பூசி போடலாம் என இருந்ததை அனைத்து குழந்தைகளுக்கும் உண்மைக்கு மாறாக தவறாக பொருத்தி சித்தரிப்பதும், "கொள்கை முடிவு" என அறிவியல் வாதங்களை எதிர்கொள்ளாமல் விலகிப்போவதும் எப்படி சரியாகும்? உச்சநீதிமன்றத்தில் அரசின் வாதம் முற்றிலும் தவறானது. "தடுப்பூசி போடாதவர்கள் பிறருக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸை பரப்புவதால், தடுப்பூசி போடாமல் இருக்கும் தனிமனித உரிமையை விட நாட்டை பாதுகாக்கும் பொது நலனே முக்கியமானது"-என்பதே அரசின் வாதம். ஆக, தேவைப்பட்டால் தடுப்பூசியை கட்டாயமாக்க(தற்போது கட்டாயமல்ல என்ற முடிவு மாறி)நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே. அறிவியல் உண்மை - "தடுப்பூசி செலுத்தியவர்கள்/செலுத்தாதவர்கள் மத்தியில் நோய்பரப்பும் தன்மையில் பெருமளவு வேறுபாடு இல்லை என்பதே லேன்செட் மருத்துவ ஆய்விதழின் முடிவு. வைரஸ் அடர்த்தியிலும்(VIRAL LOAD) வேறுபாடு இல்லை என்பதே அறிவியல் உண்மை. ஆக, தடுப்பூசி போட்டவர்களையும்,போடாதவர்களையும் பிரித்துப் பார்ப்பது தவறு. இதை உச்சநீதிமன்றத்தில் திரு.பிரசாந்த் பூசன் மரு.ஜேக்கப் புலியேல் தொடர்ந்த வழக்கில் தெளிவு படுத்தியுள்ளார். அறிவியல் வாதங்களும்,சட்ட உரிமைகளும்,ஜனநாயக மரபுகளும் தடுப்பூசி விசயத்தில் நம்மை வழிநடத்தட்டும். மரு.வீ.புகழேந்தி

கருத்துரையிடுக

0 கருத்துகள்