சாதனைப் பெண்கள் விருது விழா 2022


நந்தவனம் பவுண்டேசன்
வழங்கிய சாதனைப் பெண்கள் விருது விழா
..............................................


நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்புரை வழங்க பொருளாளர் பா.தென்றலின் நோக்கவுயுரையுடன் தொடங்கிய நிகழ்வில் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம், வளரும் அறிவியல் இதழ் ஆசிரியர் இ.கே, தி.சிவகுமார், இலங்கை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், காவல்துறை உதவி ஆய்வாளர் எஸ்.ராஜா, ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தாளாளர் திருமதி விஜயா, ஊடகவியளாலர் விக்ரமசிங்கே, கனடா ரூபம் வானொலி ராம் சங்கர் இலக்கை தினகரன் நாளிதழ் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் ஆகியோ சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருது பெற்ற பெண்களுக்கு சாதனைப் பெண் விருது வழங்கி சிறப்பித்தனர்

கோமதிசங்கரன் (மலேசியா), தீஷ்மா கருப்பசாமி (கோவை), கீதா குணாலன் (நீலகிரி), சுபத்திரா இராஜேந்திரன் (சென்னை), நாச்சியார் (கிழக்கு ஆப்பிரிக்கா), தமிழணங்கு (சென்னை), சூரியா யாலின் (இலங்கை), எஸ்.மோகனா (சென்னை), மரு.நந்தினி (புதுக்கோட்டை), கௌசல்யா(ராணி பேட்டை), ஜெயலட்சுமி (புதுக்கோட்டை), சுஹாசினி பரமானந்தன் (இலங்கை), வெற்றிச் செல்வி சந்திரகலா (இலங்கை), ஆர். சிரிலேகா (சேலம்), பி.கவிதா(சேலம்), மரு. பத்மினி ரகுநாதன் (பெங்களூர்), பத்மலோசனி லோகேந்திரலிங்கம் (கனடா), வாசுகி ராஜா (ஹைதராபாத்), விஜி வெங்கட் (சென்னை), ஜமுனா ரவி (புதுச்சேரி), பரிமளாவீரசேகரன் (திருவள்ளூர்) இவள் பாரதி (சென்னை), சுகன்யா கந்தசாமி (சென்னை), ப.நித்யா (சென்னை), சுஷாந்தி சாந்தகுமார்(இலண்டன்) ஆசியாருக்கு சாதனைப் பெண் விருது வழங்கப்பட்டது.

செல்லி ஹரிப்பிரியவின் நடனமும் செல்வி சாய் காயத்திரியின் திரையிசைப்பாடலும் நிகழ்வை அழகுபடுத்தியது. கவிஞர் சொர்ணபாரதி நிகழ்வை அழகாக தொகுத்து வழங்க நந்தவனம் பவுண்டேசன் செயலாளர் எம். சாதிக்பாட்சா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்நந்தவனம் பவுண்டேசன்
வழங்கிய சாதனைப் பெண்கள் விருது விழா
..............................................
தமிழ்நாடு திருச்சியை தலைமையியிடமாகக் கொண்டு இயங்கிவரும் நந்தவனம் பவுண்டேசன் ஆண்டுதோறு உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பல்துறைகளில் சாதித்த பெண்களுக்கு சாதனைப் பெண் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

2022 ஆம் ஆண்டுக்கான சாதனைப் பெண்கள் விருது வழங்கும் விழா 12/03/2022 அன்று சென்னை அரும்பாக்கம் விஜய் பார்க்கில் சிறப்பாக நடைபெற்றது.

நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் வரவேற்புரை வழங்க பொருளாளர் பா.தென்றலின் நோக்கவுயுரையுடன் தொடங்கிய நிகழ்வில் கனடா உதயன் வார இதழின் பிரதம ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம், வளரும் அறிவியல் இதழ் ஆசிரியர் இ.கே, தி.சிவகுமார், இலங்கை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், காவல்துறை உதவி ஆய்வாளர் எஸ்.ராஜா, ஸ்ரீவெங்கடேஸ்வரா ஆசிரியர் பயிற்சிப் பள்ளி தாளாளர் திருமதி விஜயா, ஊடகவியளாலர் விக்ரமசிங்கே, கனடா ரூபம் வானொலி ராம் சங்கர் இலக்கை தினகரன் நாளிதழ் பிரதம ஆசிரியர் செந்தில்வேலவர் ஆகியோ சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு விருது பெற்ற பெண்களுக்கு சாதனைப் பெண் விருது வழங்கி சிறப்பித்தனர்.

கோமதிசங்கரன் (மலேசியா), தீஷ்மா கருப்பசாமி (கோவை), கீதா குணாலன் (நீலகிரி), சுபத்திரா இராஜேந்திரன் (சென்னை), நாச்சியார் (கிழக்கு ஆப்பிரிக்கா), தமிழணங்கு (சென்னை), சூரியா யாலின் (இலங்கை), எஸ்.மோகனா (சென்னை), மரு.நந்தினி (புதுக்கோட்டை), கௌசல்யா(ராணி பேட்டை), ஜெயலட்சுமி (புதுக்கோட்டை), சுஹாசினி பரமானந்தன் (இலங்கை), வெற்றிச் செல்வி சந்திரகலா (இலங்கை), ஆர். சிரிலேகா (சேலம்), பி.கவிதா(சேலம்), மரு. பத்மினி ரகுநாதன் (பெங்களூர்), பத்மலோசனி லோகேந்திரலிங்கம் (கனடா), வாசுகி ராஜா (ஹைதராபாத்), விஜி வெங்கட் (சென்னை), ஜமுனா ரவி (புதுச்சேரி), பரிமளாவீரசேகரன் (திருவள்ளூர்) இவள் பாரதி (சென்னை), சுகன்யா கந்தசாமி (சென்னை), ப.நித்யா (சென்னை), சுஷாந்தி சாந்தகுமார்(இலண்டன்) ஆசியாருக்கு சாதனைப் பெண் விருது வழங்கப்பட்டது.

செல்லி ஹரிப்பிரியவின் நடனமும் செல்வி சாய் காயத்திரியின் திரையிசைப்பாடலும் நிகழ்வை அழகுபடுத்தியது. கவிஞர் சொர்ணபாரதி நிகழ்வை அழகாக தொகுத்து வழங்க நந்தவனம் பவுண்டேசன் செயலாளர் எம். சாதிக்பாட்சா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.


விருது பெற்றவர்களின் குறிப்புகள்

1. கீதா குணாளன் -நீலகிரி மாவட்டம் உதக மண்டலத்தைச் சேர்ந்தவர்
உழைப்பால்‌‌  உயர்ந்து கல்வி கற்று அழகுக்கலை நிபுண்ராகவும், சமூக செயலராகவும் விளங்குகிறார்.


2.டாக்டர். கெளசல்யா -நிருத்தியா அஞ்சலி நாட்டியப் பள்ளி நிறுவனர், அன்னை தெரசா சமூக சேவை இளைஞர் கட்டளையின் மாநில பொதுச்செயலாளர் ராணிப்பேட்டையை சேர்ந்த இவர் ஏழு வருடங்களாக நாட்டிய சேவையையும் 11 வருடங்களாக சமூக சேவையையும் செய்து வருகிறார்.


3. எஸ். மோகனா -சென்னையைச் சேர்ந்த திருநங்கையான இவர் M.SC., பட்டதாரி, கவிஞர், காஸ்மெட்டிக் கிளினிக்  அட்மின்,  சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், திருநங்கைகளுக்கும் உதவிகள் செய்து வருகிறார்.


4. விஜி வெங்கட் -
சென்னையைச் சேர்ந்த இவர் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பட்டிமன்ற பேச்சாளர் பல்வேறு தமிழ் அமைப்புகளும், தொலைக்காட்சிகளிலும், நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். அடிமை என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ளார்.
  

5. ஜமுனா ராணி -புதுச்சேரியைச் சேர்ந்த இவர் கிராமப்புற சட்ட உதவியாளராக இருந்து பெண்களுக்கு சட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆலோசனைகள் வழங்கி வருகிறார். கவிதை, கட்டுரைகள், நாடகங்கள் எழுதி எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.


6. பத்ம லோசனி லோகேந்திரலிங்கம் -
கனடாவில் 31 வருடங்களாக வாழ்ந்து வரும் இவர் இலங்கையில் யாழ்ப்பாணம் அருவில் என்னும் கிராமத்தில் பிறந்தவர். அங்கு மகளிர் மன்ற தலைவியாக இருந்து பல பெண்களுக்கு கைத்தொழில் ஆரம்பிக்க  காரணமாக இருந்துள்ளார். கனடா உதயன் வார இதழின் பங்காளராக இருந்து தனது கணவன் லோகெந்திரலிங்கம் அவர்களுடன் இணைந்து பல சமூகப் பணிகளையும் செய்து வருகிறார்.


7. நாச்சியார்


தென் ஆப்பிரிக்காவை வசிப்பிடமாகக் கொண்ட இவர் மனிதநேய செயல்பாட்டாளர் ஆகவும், அண்மையில் ரஷ்ய உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் பலர் நாடு திரும்ப உதவியிருக்கிறார். எழுத்தாளராகவும் திகழ்கிறார்.


8. கோமதி சங்கரன் -


மலேசியாவை சேர்ந்த இவர் மலேசியா தமிழில் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 25 வருடங்களாகவும் ஆசிரியராக பணியாற்றும் இவர் தனது இருந்த பணி உங்களுக்கு 140 சர்வதேச விருது உள்ளார்.
.

9. சுபத்திரா ராஜேந்திரன் -
சென்னையைச் சேர்ந்த இவர், Varun Aditya Foundation துணை தலைவராக இருந்து பல்வேறு சமூக பணிகளை செய்து வருகிறார். சர்வதேச அளவில் பல தமிழ் அமைப்புகளில் உறுப்பினராக இருந்து தமிழ் பணிகளையும் செய்து வருவதாக சிறந்த தொழில் முனைவராகவும் ஆகவும் திகழ்கிறார்.


10. Dr. பத்மினி நாகராஜு -


பெங்களூரைச் சேர்ந்த இவர் பேராசிரியராகப் பணியாற்றி வரும் இவர், பல சிறந்த மாணவர்களுக்கு கல்வி சதவீதங்கள் செய்து வருகிறார். கையிலும் நாட்டுப்பற்று சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.


11. பரிமளா வீரசேகரன் - 
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் மகளிர் சார் தொழிற்சங்கத் தலைவராக பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவி வருகிறார் குடும்ப நல ஆலோசனை ஆலோசனை சிறந்த முறையில் சேவை செய்து வருகிறார்.


12. பா.நித்தியா -  சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இவர் பள்ளி ஆசிரியராக இருந்து கொண்டு பல்வேறு சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். கவிஞர், எழுத்தாளர் எனப்படும் 8 தனிநபர் உலக சாதனையும் படைத்துள்ளார்.

13. ஜெயலட்சுமி -புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர் மருத்துவத்துறையில் உன் பணியாற்றிவருகிறார் சிறப்பாக பணியாற்றி பலரையும் காப்பாற்றியுள்ளார்.


14. ஆர். ஸ்ரீலேகா -


சேலத்தை சேர்ந்த இவர் தொழில் முனைவோராக இருந்து Graini foods என்ற இயற்கை உணவுப் பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
   
15. சுகன்யா கந்தசாமி -

 சென்னையைச் சேர்ந்த இவர், சிறப்பு குழந்தைகள் ஒரு வாழ்வுக்கான ஆலோசகராக இருந்து வருகிறார் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான செய்யும் வழங்கிவருகிறார் கண்ட புதுமைப்பெண் பெண் சாதனையாளராக சாதனையாளர் விருதையும் பெற்றுள்ளார்.

16. சூரியயாழினி -இலங்கை வவுளியா மாவட்டத்தைச் சேர்ந்த இவர், நிருத்தியநிகேதன் நூல்கலைக் கல்லூரியின் நிறுவனர். கல்வித்துறையில் நடன ஆசிரியராகவும் பணியாற்றும் இவர் நடனத்துறையில் mfa பட்டமும் கல்வித்துறையில் med  பட்டமும் பெற்றுள்ளார்.


17. சுஹாசினி பரசுராமன் - இலங்கையைச் சேர்ந்த இவர் சிறந்த அழகுக்கலை நிபுணராக திகழ்கிறார். இலங்கையின் முன்னணி அழகுக்கலை நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் திருகோணமலை அழகுக்கலை கலைஞர்கள் சார்ந்த தலைவியாக இருக்கிறார். Miss Tamil universe Canada அமைப்பின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளராகவும் பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளிலும் இருந்து வருகிறார்.18. தமிழணங்கு -சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த நான்கு வருடமாக திரைப்படத்துறையில் பாடலாசிரியராக இருந்து வருகிறார் இதுவரையில் 20 படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார். என்னை நோக்கி பாயும் தோட்டா, காளி, பரமபத விளையாட்டு, பேச்சுலர், கார்பன், போன்ற படங்களுக்கு சிறப்பாக பாடல் எழுதியுள்ளார்.


19. துஷாந்தி -இலங்கையைச் சேர்ந்த இவர் தற்போது இலண்டனில் வசித்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர், சின்னத்திரை நாடக இயக்குனர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் என சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

20. வாசுகி ராஜா -
ஹைதராபாத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவர். கடந்த 22 ஆண்டுகளாக தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கை துறையில் பணியாற்றி வருகிறார் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்களில் அறிவிப்பாளர், செய்தியாளர், செய்திவாசிப்பாளர், நெறியாளர் செய்தி ஆசிரியர் என பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார். சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

21. இவள் பாரதி, ஊடகவியலாளர் -
சென்னையைச் சேர்ந்த இவர் ஊடகத்துறையில் 15 வருடமாக பணியாற்றி வருகிறார். நம் தமிழ் மீடியா சேனலின் நிறுவனர், நம் பதிப்பகத்தின் பதிப்பாளர். 40க்கும் மேற்பட்ட நூல்களை நம் பதிப்பகம் மற்றும் முகவரி பதிப்பகத்தின் மூலமாக வெளியிட்டுள்ளார் பல்வேறு சிறு பத்திரிகையில் படைப்புகள் எழுதி வருகிறார். இவர் புதிய தலைமுறை பெண் பத்திரிகையில் எடுத்த நேர்காணல்கள் ‘இவள் சந்தித்த இவர்கள்’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். க்ளவு போன கனவு, கணவன் காதலன் தோழன், சில தேன் துளிகளும் எறும்புகளும், வெள்ளைப் பொய்களும் கருப்பு உண்மைகளும், நான் சொல்வதெல்லாம், நீ மிதமாக நான் மிகையாக, ப்ரியங்களின் அந்தாதி, சிறுகை அளாவிய கூழ் என இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள் மற்றும் கன்ஸ்யூமர்கள் கவனிக்கவும், எப்படி?, குழந்தை சூழ் உலகு என மூன்று கட்டுரை நூல்கள், குட்டி மோச்சு என்கிற குழந்தைகளுக்கான நாவல் என 14 நூல்களை எழுதியுள்ளார். 

22. கவிதா -
சேலத்தைச் சேர்ந்த இவர் ஊட்டச்சத்து நிபுணராக இவர் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஊட்டச்சத்து பற்றிய ஆலோசனை வழங்கி வருகிறார், graini foods என்ற ஊட்டச்சத்தபொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.


23. வெற்றிச்செல்வி -இலங்கையைச் சேர்ந்த இவர் எழுத்தாளராகவும் சமூகப் பணியாளராகவும் சேவையாற்றி வருகிறார்.

24. ரேஷ்மா -பொள்ளாச்சியைச் சேர்ந்த இவர் அன்னம் அறக்கட்டளையின் நிறுவனராக இருந்து சமூகப் பணியாற்றி வருகிறார் பெண்களின் முன்னேற்றத்திற்காக சுயவேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார். குழந்தைக்கு கறுக்கு தன்னம்பிக்கை விழிப்புணர்வு மையம் அமைத்து ஆளுமைத்திறனை வளர்த்து வருகிறார்


கருத்துரையிடுக

0 கருத்துகள்