சுந்தர ராமசாமி சில நினைவுகள் - சி.மோகன்

1957ஆண்டு முதல் முறையாக சுந்தர ராமசாமியை சந்தித்த அற்புதமான தருணங்களில் தொடங்குகிறது இந்த புத்தகம். 
அதன் பிறகு தனக்கும் சு. ரா வுக்கும் ஏற்பட்ட அன்பும் நெருக்கமும் என்னை இலக்கியத்துக்குள் ஆழ்ந்து கொண்டு சென்றது.
அதன் பிறகு சுந்தர ராமசாமியின் வீட்டிலேயே தங்கி நிறைய புத்தக விமர்சனக் கூட்டங்கள் நடத்தி அறிவை மேம்படுத்திக் கொள்ள எனக்கு வாய்ப்பை அவரே உருவாக்கிக்கொடுத்தார் என்கிறார்  ஆசிரியர்.

இருவருக்குமிடையில் நல்ல உறவு மேம்பட்டு இருந்தபோதிலும் எதிர் எதிர் விமர்சனங்கள் தெரிவித்து தங்களை பட்டை தீட்டிக் கொண்டனர்.இந்த புத்தகத்தில் மிக முக்கியமாக சுந்தரராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் பற்றி சி.மோகன் நிறைய மர்ம முடிச்சுகளை அவிழ்த்து உள்ளார். க்ரியா பதிப்பகம் ராமகிருஷ்ணனும்  அவருடனான நட்பையும் பதிப்பகத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார்.

ஜேஜே சில குறிப்புகள் புத்தகத்தை அச்சிடுவதற்கு முன்பாக சி.மோகன் சில முரண்பாடுகள் இருப்பதாக சுந்தர ராமசாமி கடிதம் எழுதியிருந்தார்.
பிறகு அதை எவ்வாறு அணுகி சுந்தரராமசாமி ஏற்றுக்கொண்டாரா இல்லையா பதிப்பிலிருந்து புத்தகம் நிறுத்தப்பட்டு எந்த மாற்றத்தை ஜேஜே சில குறிப்புகள் ஏற்படுத்தியது என்பதை புத்தகத்தில் உணர்வுப்பூர்வமாக சொல்லியுள்ளார்.

அத்தனை காலகட்டத்திலும் இருவருக்குமான கண்ணியத்தையும் நெருக்கத்தையும் முரண்பட்ட கருத்துக்களையும் சுந்தரராமசாமி என்னும் இலக்கிய ஆளுமையை கையாண்ட விதத்தையும் கூறியுள்ளார்.

தன்னுடைய திருமண நிகழ்வின் குறிப்பிடும்போது தன் தந்தையாகவே சு. ரா வை பார்க்கிறார். 


இறுதியாக சுந்தர ராமசாமி அஞ்சலியில் கலந்து கொண்ட எல்லாருமே அவருக்கு மிக நெருக்கமானவர்கள் என்று அழகிய உணர்வோடு கலங்கி கொண்டிருந்தனர். சுந்தர ராமசாமி என்னும் ஆளுமையின் ஒரு அற்புத அம்சம் இது.இனிஎவராலும் எப்போதும் கைப்பற்ற முடியாத ரகசியம் என இந்த புத்தகத்தை முடித்துள்ளார்.

மிகச் சிறிய புத்தகம். சுந்தரராமசாமியின் 28 ஆண்டுகால நினைவுகளை புத்தகம் பார்க்க வைக்கிறது. ஒரு இலக்கிய ஆளுமையின் உடன் பயணித்த அற்புதத்தை நமக்கு தந்திருக்கிறார் சி. மோகன்.


தனசேகர பாண்டியன்கருத்துரையிடுக

0 கருத்துகள்