தேசிய கல்வி கொள்கையை திரும்பப்பெறு - டெல்லியில் தர்ணா போராட்டம்


மே 9, 2020 - டெல்லியில் தர்ணா போராட்டம் -
அகில இந்திய கல்வி பாதுகாப்பு கமிட்டி  (ஏ‌.ஐ.எஸ்.இ‌.சி.) அறைகூவல்!


தேசிய கல்வி கொள்கை (தே.க.கொ. - 2020) ஐத் திரும்பப்பெறு!
தேசிய கல்வி கொள்கை- 2020 ஐ அமல்படுத்துவதை உடனே  நிறுத்து!

கல்விச் சமூகத்தின் கருத்துகளைக் கருத்தில் கொள்ளாமல் நாடுமுழுவதும் எழுந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு தேசிய கல்விக் கொள்கை -2020 ஐ (தே.க.கொ. -2020) அவசர அவசரமாக அமல்படுத்துவதில் பெரும்பாலான மாநில அரசுகளின் உதவியோடு மத்திய அரசு இறங்கியுள்ளது.

குழந்தைப் பருவக் கல்வி முதல் பள்ளிக்கல்வி, உயர்கல்வி என கல்வியின் அனைத்து நிலைகளையும் முழுமையாக கார்பொரேட் மயமாக்கும் திட்டமே இந்த தே.க.கொ. - 2020 ஆகும். 

புதிய இயல்புநிலை, டிஜிட்டல் ஆன்லைன் கல்வி போன்றவற்றுக்கான அதீத முக்கியத்துவம் ஏற்கனவே கல்வியின் அனைத்து நிலைகளிலும் பெரும்பாலோனோரின் கல்வி வாய்ப்பை அழித்துவிட்டது. அதோடு சேர்த்து, முன்பருவக் கல்வியில் தொடக்கக்  குழந்தைப் பருவ கவனிப்பு மற்றும் கல்வி, மேல்நிலைக் கல்வியோடு உயர்கல்வியை இணைத்து பள்ளிக் கட்டமைப்பை மாற்றிமைத்தல், பள்ளிகள் முதலே தொழிற்கல்வியைப் புகுத்துதல், அகடமிக் கிரெடிட் வங்கி, கலவைக் கற்றல் மற்றும் கற்பித்தல் முறை, பல்துறை அணுகுமுறை போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினால் ஏற்கனவே இருக்கும் ஓரளவு முழுமையான கல்வியின் மிச்ச சொச்சங்களையும் தகர்த்துவிடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் பண்டைய பெருமைகளையும் மேதமைகளையும் மீண்டும் கொண்டுவருகிறோம் என்ற பெயரில் 'இந்திய அறிவுசார் அமைப்பு' எனத் திரிக்கப்பட்ட பொய்யான வரலாற்றைப் பாடப்புத்தகங்களில் கொண்டுவர தே.க.கொ.- 2020 எத்தனிக்கிறது. நவீன விஞ்ஞானபூர்வ மதச்சார்பற்ற கல்விக்காக நின்ற சமீபகால சிந்தனையாளர்கள், தத்துவஞானிகள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகளின் ஒட்டுமொத்த காலத்தையும் துடைத்தெறிந்துவிட்டு இந்திய வரலாற்றின் உண்மையான நிறமே காவி என்ற தோற்றத்தை உருவாக்கி எதிர்காலச் சந்ததியினர் குருட்டுத்தனமாக எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அடங்கி நடக்கும் வண்ணம் பாசிசப் போக்கிற்கான களத்தை உருவாக்குவதற்காக மதவாத வரலாற்றையும் சமூகக் குழப்பதையும் ஏற்படுத்தி பகுத்தறிவுக்குப் புறம்பான விஞ்ஞானத்திற்கு எதிரான கருத்துகளை, ஆதிக்க வெறிவாதத்தை, மூடநம்பிக்கைகளைப் பரப்புகின்றனர்.

’இலகுவான ஆனால் இறுக்கமான ஒழுங்குமுறை’ என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் மற்றும் நிருவாகங்களின் உரிமைகளையும் தன்னாட்சியையும் முழுமையாகப் பறித்து அங்குள்ள ஜனநாயக சூழ்நிலைகளை அழிப்பதற்கு தே.க.கொ. - 2020 எத்தனிக்கிறது.

 இதனை நாம் ஏற்கனவே டெல்லி ஜே.என்.யு, மேற்கு வங்கத்தில் விஷ்வபாரதி, சாகர் பல்கலைக்கழகம் போன்ற கல்விநிலையங்களில் பார்த்து வருகின்றோம்.

நண்பர்களே தே.க.கொ.  - 2020 என்பது திடீரென முளைத்த கல்விக் கொள்கையோ அல்லது தற்போதைய ஆட்சியாளர்களின் கொள்கையோ அன்று. மாறாக இந்தியா சுதந்திரம் பெற்றது முதலே ஆட்சி செய்து வருவோரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொண்டு வரப்பட்டுள்ள கல்விக் கொள்கைகளின் தொடர்ச்சியும் நீட்சியுமே ஆகும்.

நண்பர்களே, இதனைக் கிளர்ந்தெழுந்து எதிர்க்க வேண்டும். தே.க.கொ. - 2020 அறிவிக்கப்பட்டது முதலே இதனால் விளைய இருக்கும் பேராபத்து குறித்து மக்களிடையே அகில இந்திய கல்விப் பாதுகாப்பு இயக்கம் (ஏ.ஐ.எஸ்.இ.சி.) விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது. அடுத்தடுத்து வந்த கொரோனா நோய்ப்பெருந்தொற்று அலைகள் இவற்றை அமல்படுத்த அரசாங்கங்களுக்கு வாய்ப்பாகிவிட்டன. ஆனாலும் ஏ.ஐ.எஸ்.இ.சி. யின் பிரச்சாரங்களுக்கு மக்கள் செவி சாய்த்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது தலைநகரில் நேரடியாக எதிர்ப்பியக்கத்தைக் காட்டவேண்டிய தருணம் இது என்று ஏ.ஐ.எஸ்.இ.சி. கருதுகிறது.
இதற்காக, வரும்  மே 9 2022, திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் டெல்லியில் மண்டி இல்லம் முதல் ஜந்தர் மந்தர் வரை அகில இந்தியப் பேரணியையும் அதனைத் தொடர்ந்து தர்ணாவும் நடத்த ஏ.ஐ.எஸ்.இ.சி. ஏற்பாடு செய்துள்ளது. இதில் நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் உரையாற்ற உள்ளனர். வரவிருக்கும் பேரபாயத்தை உணர்ந்து பேராபத்தை விளைவிக்க இருக்கும் தே.க.கொ. - 2020 ஐ அமல்படுத்துவதைத் தடுத்து நிறுத்தவும் தே.க.கொ. - 2020 ஐ திரும்பப்பெறவும் வலியுறுத்தி வலுவான எதிர்ப்பியக்கத்தைக் கட்டியெழுப்ப அனைத்து வழிகளிலும் பங்கேற்று உதவுமாறு உங்களை அறைகூவி அழைக்கின்றோம்.

சகோதர வாழ்த்துகளுடன் தங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும்.
பிராகாஷ் என் ஷா, தலைவர்

அனிஷ் குமார் ரே, பொதுச் செயலாளர், ஏ.ஐ.எஸ்.இ.சி.

தேசிய கல்விக் கொள்கை - 2020 ஐ திரும்பப் பெறு!

தேசிய கல்விக் கொள்கை - 2020 ஐ அமல்படுத்துவதை நிறுத்து!
மே 9, 2020 அன்று டெல்லியில் நடைபெறும் தர்ணாவை மாபெரும் வெற்றிபெறச் செய்வீர்!


அகில இந்தியக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்,
தமிழ்நாடு தயாரிப்புக் குழு.

தொடர்புக்கு:
ம. ஜெ. வால்டேர் 
11 / 43, ஸ்ரீனிவாசா இரண்டாவது தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600 033.
அலைபேசி - +918681091410.

கருத்துரையிடுக

0 கருத்துகள்