உரையாடல் திறன் ஏன் அவசியம் பேராசிரியர் எஸ்.நிர்மலா

கடந்த ஏப்ரல் 8, அன்று திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள வேல்டெக் ரங்கா சங்கு  கலைக்கல்லூரியின் ஆங்கிலத்துறையில் COMMUNICATION SKILLS – NEED OF THE HOUR என்ற தலைப்பில் ஒரு நாள்  சிறப்பு விரிவுரை நடத்தப்பட்டது. 

விரிவுரையில்கலந்துகொண்ட இளங்கலை மாணவர்களிடையே உரையாடல் திறன் பற்றியும் அதன் அவசியங்களைப் பற்றி மாநில கல்லூரி, ஆங்கிலத் துறை, பேராசிரியை முனைவர் எஸ்.நிர்மலா அவர்கள் தனது இருபத்தெட்டு ஆண்டுக்கால ஆசிரியர் பணி அனுபவங்களின் வாயிலாக மாணவர்களின் மனநிலைக்கிணங்க திறன் மேம்பாடுகளை பற்றி அற்புதமான உரை நிகழ்த்தினார்.

இரண்டரை மணி நேரம் பயிற்சியில் மாணவர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள்.

“If you need to overcome your language difficulties. There is one thing you need to know is  ‘usage’ 
- Dr S. Nirmala.” 

பயிற்சி மூலமும், செயல்முறை விளக்கங்கள் வாயிலாகவும் மாணவர்களின் மொழி பேசும் திறனையும், சிந்திக்கும் தன்மையையும் விரிவுரையின் வாயிலாகப் பன்மை படுத்தினார்.   மாணவர்கள்  கேள்விகளின் வாயிலாக தங்கள் சந்தேகங்களைத் தெளிவு படுத்திக்கொண்டனர். 

நிகழ்ச்சியில் மாணவர்களை இரண்டு குழுக்களாகப்பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டுச்  சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. வெற்றிபெற்ற குழுவிற்குப் பரிசும். உற்சாகத்துடன் கலந்து கொண்ட மாணவர்களுக்கு ஊக்க பரிசுகள்வழங்கப்பட்டது

நிகழ்ச்சியில் மு. தனஞ்செழியன் ஆங்கிலத் துறை பேராசிரியர், வரவேற்புரை வழங்கக் கல்லூரியின் முதல்வர் முனைவர். தா. ஜெயச்சந்திரன், அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். திட்ட அலுவலர் மா. அன்னபூரணி அவர்கள் சிறப்பு வாழ்த்துரை வழங்க, அதனைத் தொடர்ந்து, ஆங்கிலத்துறைத் தலைவர் ஆர். கார்த்திகேயன் அவர்கள் சிறப்பு விருந்தினர் அறிமுக உரை வழங்கினார்.

கல்லூரி மேம்பாட்டுத் துறை மற்றும் கணிதவியல் பேராசிரியர் முனைவர் டி.ஸ்டாலின் அவர்கள் விருந்தினருக்குச் சிறப்பு மரியாதை செய்தார்.  ஆங்கிலத்துறை பேராசிரியர் சி. ரமேஷ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் எஸ். அர்ச்சனா மற்றும் மு. விஜயகுமார், பி. சுபாஷ் சின்னப்ப நாதன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பைமேற்கொண்டார்கள்.

நிகழ்ச்சியை சிறப்பாக இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் எஸ். ராஜேஸ்வரி மற்றும் கே. ரூபிகா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். அதே வகுப்பைச் சேர்ந்த பா. பிரசாந்த் மற்றும் எஸ். பிரேம்குமார் அவர்கள் நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்தனர்

 

 

கருத்துரையிடுக

0 கருத்துகள்